A Oneindia Venture
bredcrumb

ஓசூர்-க்கு வந்த பலே நிறுவனம்.. 55 ஏக்கரில் மெகா தொழிற்சாலை..!!

By Goodreturns Staff
| Published: Monday, December 30, 2024, 16:45 [IST]

AGI Milltec என்ற இயந்திர உற்பத்தி நிறுவனம், ஓசூரில் 7,25,250 சதுர அடியில் சுமார் 836 கோடி முதலீட்டில் அமையவுள்ளது.

AGI Milltec
1/6
ஓசூர் தொழில்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், தினமும் புது புது நிறுவனங்கள் வருவதை தாண்டி, ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களும் விரிவாக்க பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.
AGI Milltec
2/6
இந்த நிலையில் தொழிற்சாலைக்கான இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனமான AGI Milltec, 55 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.836 கோடி முதலீடு செய்து, 7,25,250 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உற்பத்தி வளாகத்தை அமைக்க உள்ளது.
AGI Milltec
3/6
AGI Milltec நிறுவனத்தின் இந்த மெகா திட்டத்தின் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AGI Milltec
4/6
இந்த முதலீடு ஓசூர் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓசூர் பெங்களூர்-க்கு அருகில் இருக்கும் காரணத்தால் AGI Milltec நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தொழில்துறைக்கும் சேவை செய்யும்.
AGI Milltec
5/6
AGI Milltec நிறுவனம், உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயாரித்து வருகிறது. இந்த புதிய வளாகம் அமைவதன் மூலம், நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். மேலும், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை விரைவாகவும், குறைந்த செலவிலும் வழங்க முடியும்.
AGI Milltec
6/6
இந்த திட்டம் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.