By
Sidhanathan K
| Published: Sunday, September 1, 2024, 17:26 [IST]
புளூ சிப் பங்குகள் என்பது பெரிய, நன்கு நிலைநிறுத்தப்பட்ட, நிதிநிலையான நிறுவனங்களின் பங்குகளை குறிக்கிறது. அதாவது, ஒரு நிறுவனத்தின் பங்குகள் நிண்ட காலமாக முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தையும், வருடம் தவறாது டிவிடன்டு தொகை அளித்தும், பங்கு சந்தைகளின் சரிவுகளில் அதிக அளவில் பாதிக்காமல் இருக்கும் பங்குகளே புளூ சிப் பங்குகள் ஆகும்.
1/5
புளூ சிப் பங்குகள் பற்றி தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/do-you-know-about-blue-chip-stocks-gr248.html
இந்நிறுவனங்கள் தங்கள் துறைகளில் தலைசிறந்தவையாக உள்ளன. மேலும், மோசமான பொருளாதார நிலைகளிலும் நன்றாக செயல்படும் திறன் கொண்டவையாகும். மேலும், நீண்டகால வளர்ச்சி மற்றும் வருமானத்தை நாடும் முதலீட்டாளர்களிடையே இது மிகவும் பிரபலமானவையாகும்.
2/5
புளூ சிப் பங்குகள் பற்றி தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/do-you-know-about-blue-chip-stocks-gr248.html#photos-1
இந்நிறுவனங்களுக்கு நிலையான வருமானம், நம்பகமான பாரிவட்டிகள் மற்றும் சந்தையில் வலுவான புகழ் ஆகியவற்றின் நீண்டகால வரலாறு உள்ளது. இத்தகைய பங்குகள் உயர் தரமானதாகவும் மற்றும் விலை உயர்ந்தாகவும் இருக்கும்.
3/5
புளூ சிப் பங்குகள் பற்றி தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/do-you-know-about-blue-chip-stocks-gr248.html#photos-2
முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கையுடன் இந்த பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். இந்த பங்குகளில் முதலீடு செய்வதன் முலம் முதலீட்டாளரின் இலக்குகளை எளிதாக அடைய முடியும்.
4/5
புளூ சிப் பங்குகள் பற்றி தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/do-you-know-about-blue-chip-stocks-gr248.html#photos-3
புளூ சிப் நிறுவனங்கள் நிதிநிலையில் வலிமையாகவும் மற்றும் நம்பகமானதாகவும் இருக்கும். இத்தகைய நிறுவனங்கள் சென்செக்ஸிலும், நிப்டியிலும் இடம் பெறும். உதாரணமாக, ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், லார்சன் அண்ட் டூப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ போன்றவை புளூ சிப் நிறுவனங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
5/5
புளூ சிப் பங்குகள் பற்றி தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/do-you-know-about-blue-chip-stocks-gr248.html#photos-4
இதில் சில பங்குகள் அதிக முதலீடு தொகையை கொண்டவையாகும். மேலும், புளூ சிப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று 100% உத்திரவாதமும் கிடையாது. ஆனால், நிலையான வளர்ச்சி, பாரிவட்டிகளின் வழியாக நிலையான வருமானம் மற்றும் குறைந்த அபாயம் எனும் வர்த்தக கட்டமைப்பை விரும்பும் மதிப்புமிக்க முதலீட்டாளர்களுக்கு புளூ சிப் பங்குகள் சிறந்ததாகும்.