A Oneindia Venture
bredcrumb

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண் பற்றி தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Wednesday, July 31, 2024, 19:04 [IST]

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்குப் பின்னால் உள்ள சிவிவி எண் என்றால் என்ன, அது எதற்கு உதவுகிறது, எப்படி வேலை செய்கிறது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் காணலாம்.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண் பற்றி தெரியுமா..?
1/5

இணையம் நம்முடைய வாழ்வை மிகவும் எளிதாக்கிவிட்டது என்றே சொல்லலாம். வங்கி பரிவர்த்தனைக்காக  நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த காலம் போய் இன்று இணைய வழி வங்கி பரிவர்த்தனையானது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. அப்படி ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு கார்டு சரிபார்ப்பு எண் எனும் சிவிவி (CVV) எண் கட்டாயம் தேவைப்படும்.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண் பற்றி தெரியுமா..?
2/5
சிவிவி எண் ஆனது ஆன்லைன் பரிவர்த்தனையின் போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. நீங்கள் ஒரு ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடும் பொழுது உங்களுடைய கார்டு காலாவதியாகும் தேதி, பெயர் போன்ற அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின் அந்த வணிக இணையதளம் சிவிவி எண் கேட்கும்.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண் பற்றி தெரியுமா..?
3/5
நீங்கள் உங்கள் அட்டையின் பின்னால் இருக்கும் சிவிவி என்கிற ஒரு 3 இலக்க எண்ணை என்டர் செய்வீர்கள். வங்கிகளை பொறுத்து கார்டுகளில் வெவ்வேறு இலக்க சிவிவி எண்கள் இருக்கும். உதாரணமாக, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளில் 3 இலக்க சிவிவி எண்களும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவன கார்டில் 4 இலக்க சிவிவி எண்களும் இருக்கும். அதேபோல, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளில் தான் சிவிவி என்ற பெயர் பயன்படுத்துகிறோம். அதுவே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு என்றால் அதனை CID என்று குறிப்பிடுவார்கள்.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண் பற்றி தெரியுமா..?
4/5

ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது நாம் பரிவர்த்தனை செய்யும் டெபிட் கார்டு நம்மிடம்தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் சிவிவி பயன்படுகிறது. நாம் பயன்படுத்தும் கடவுச் சொற்களைக்கூட மறந்துவிடக்கூடாது என்பதற்காக சில தளங்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஆனால், சிவிவி எண்ணை Payment card industry Data security standards-ன் படி எந்த ஒரு தளத்திலும் தகவல்களை சேமித்து வைக்கக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண் பற்றி தெரியுமா..?
5/5

அந்தவகையில், சிவிவி எண் ஆனது நீங்கள் ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் போது, உங்களுக்கு சில கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் உங்களுடைய சிவிவி குறித்த தகவல்களை பிறருக்கு கொடுக்காமல் இருந்தால் இந்த 3 இலக்க சிவிவி எண் உங்களுக்கு கட்டாயம் உதவும். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சிவிவி எண் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், யாராவது சிவிவி எண்ணை கேட்டால் கண்டிப்பாக கொடுத்துவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+