A Oneindia Venture
bredcrumb

வங்கிக்கணக்கை என்னென்ன காரணங்களுக்காக ஃப்ரீஸ் செய்வார்கள் தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Wednesday, September 4, 2024, 12:14 [IST]

வங்கிக்கணக்கை ஃப்ரீஸ் செய்வது என்றால், வங்கி அக்கவுண்ட்டில் மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை எந்த விதமான ட்ரான்ஸாக்ஷனையும் மேற்கொள்ள முடியாது என்று அர்த்தமாகும். இதனை பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

வங்கிக்கணக்கை என்னென்ன காரணங்களுக்காக ஃப்ரீஸ் செய்வார்கள் தெரியுமா..?
1/5

கட்டி முடிக்காத தனியார் கடன்கள், வரித்தவணைகள், ஒரு நிறுவனம் அல்லது தனிப்பட்ட நபருக்கு பணம் செலுத்தாமல் இருத்தல், அக்கவுண்ட்டில் சந்தேகிக்கும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அக்கவுண்ட்டை சட்டத்துக்கு புறம்பான காரியங்களுக்கு உபயோகித்தல், கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க முயற்சித்தல், மிக சமீபத்தில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல் போன்ற சில காரணங்களுக்காக வங்கிக்கணக்கு ஃப்ரீஸ் செய்யப்படலாம்.

வங்கிக்கணக்கை என்னென்ன காரணங்களுக்காக ஃப்ரீஸ் செய்வார்கள் தெரியுமா..?
2/5
அக்கவுண்ட் ஹோல்டர் முன்னதாக ஏதேனும் செக்குகள் அளித்திருந்தாலும், அனைத்து பேமண்ட்கள் மற்றும் ட்ரான்ஸாக்ஷன்கள் நிறுத்தி வைக்கப்படும். ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா, செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா(SEBI), வருமான வரி அத்தாரிட்டிகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற ரெகுலேட்டர்களுக்கு வங்கி அக்கவுண்ட்களை ஃப்ரீஸ் செய்வதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளன.
வங்கிக்கணக்கை என்னென்ன காரணங்களுக்காக ஃப்ரீஸ் செய்வார்கள் தெரியுமா..?
3/5
கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ், வருமான வரித்துறைக்கு சுமார் 40 கோடி ரூபாய் தவணை கட்ட தவறியதால், அந்நிறுவனத்தின் அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, மார்க்கெட் ரெகுலேட்டரான செபி, சஹாரா குழுமத்தின் அக்கவுண்ட்களை முடக்கியதும் குறிப்பிடத்தக்கது.
வங்கிக்கணக்கை என்னென்ன காரணங்களுக்காக ஃப்ரீஸ் செய்வார்கள் தெரியுமா..?
4/5

அவ்வாறு முடக்கப்பட்ட அக்கவுண்ட்டை அன்ஃப்ரீஸ் செய்வதற்கு சாதகமான நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

வங்கிக்கணக்கை என்னென்ன காரணங்களுக்காக ஃப்ரீஸ் செய்வார்கள் தெரியுமா..?
5/5

ஒரு அக்கவுண்ட்டில் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களை பற்றி சந்தேகித்தால், வங்கிகளுக்கு அந்த அக்கவுண்ட்டை ஃப்ரீஸ் செய்யக்கூடிய எல்லா அதிகாரமும் உண்டு. எனினும், அவ்வாறு ஃப்ரீஸ் செய்வதற்கு முன், வங்கிகள் அக்குறிப்பிட்ட அக்கவுண்ட் ஹோல்டருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அவசியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+