A Oneindia Venture
bredcrumb

மருத்துவ காப்பீடு ஏன் அவசியம் தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Tuesday, August 20, 2024, 16:14 [IST]

இன்றைய வாழ்க்கைமுறையில் மருத்துவச் செலவுகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டன. திடீர் மருத்துவச் செலவுகள் நம் சேமிப்பையே வீணடித்துவிடும். இதற்கான ஒரு தீர்வாகத்தான் மருத்துவ காப்பீடுகள் (Health insurance) உள்ளன. அந்தவகையில், இந்த பதிவில் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.

மருத்துவ காப்பீடு ஏன் அவசியம் தெரியுமா..?
1/5

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தரமான மருத்துவ சிகிச்சை பெற மருத்துவக் காப்பீடு இருந்தால், காப்பீடு செய்யப்பட்ட நிறுவனம் அனைத்து மருத்துவச் செலவுகளையும் கவனித்துக் கொள்ளும். இதனால், நமது குடும்பத்திற்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும். அதேபோல, மருத்துவ காப்பீடு பெறுவதன் முலம் நமது சேமிப்பை இழக்கவும், கடன் பெறவும் தேவையில்லை.

மருத்துவ காப்பீடு ஏன் அவசியம் தெரியுமா..?
2/5

இருப்பினும் திடீர் மருத்துவச் செலவு ஏற்படும் நிலையில், மருத்துவ காப்பீட்டுத் தொகை வரம்புக்கு ஏற்பவே காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் தொகை நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, நாம் ரூ.2 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு எடுத்திருந்தால், சிகிச்சை பெறும் மருத்துவமனையின் படுக்கை வசதி கட்டணமாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.2,000 (காப்பீட்டுத் தொகையில் 1 சதவீதம் மட்டும்) மட்டுமே கோர முடியும். படுக்கை வசதிக்கான கட்டணம் இந்தத் தொகையைத் தாண்டினால், அந்த கூடுதல் செலவை பாலிசிதாரராகிய நாம்தான் ஏற்க வேண்டியிருக்கும்.

மருத்துவ காப்பீடு ஏன் அவசியம் தெரியுமா..?
3/5

நமது வருமானத்துக்கு ஏற்ப மருத்துவ காப்பீட்டுத் தொகையை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேபோல, இளம் வயதிலேயே மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், குறைந்த வயது காரணமாக பிரீமியம் தொகையும் குறைவாக இருக்கும். மேலும் மருத்துவச் செலவுக்கான இழப்பீட்டை கோராத ஆண்டுகளில், மருத்துவக் காப்பீட்டைப் புதுப்பிக்கும் நிலையில், காப்பீட்டுத் தொகையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பது நல்லது.

மருத்துவ காப்பீடு ஏன் அவசியம் தெரியுமா..?
4/5

தற்போது ஒரே காப்பீட்டு திட்டத்தில், நம்மோடு சேர்த்து நமது குடும்பத்திற்கும் காப்பீடு பெற முடியும். மேலும், மருத்துவ காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் வருமான வரிச் சட்டப் பிரிவு 80டி-இன் கீழ் அதிகபட்சம் ரூ.25,000 வரை வரி விலக்கு பெற முடியும். அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.30,000 வரை வரி விலக்கு பெறலாம். எனவே, மருத்துவ காப்பீடு என்பது நம் அழகான வாழ்க்கையை பாதுகாக்கும் ஒர் கவசமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ காப்பீடு ஏன் அவசியம் தெரியுமா..?
5/5

இந்த மருத்துவ காப்பீடு, விபத்து போன்ற எதிர்பாராத மருத்துவ செலவுகளை ஈடுக்கட்ட உதவியாக இருக்கும். நமது சேமிப்பில் சிறு தொகையை கொண்டு குடும்பத்தையும் அமைதியான முறையில் வழிநடத்த முடியும். மருத்துவக் காப்பீடு இல்லாவிட்டால், நிதிச் சிக்கல்களுடன் குடும்பத்தின் மன அமைதியும் கடுமையாக பாதிக்கப்படும். எந்தவொரு மருத்துவச் செலவையும் மருத்துவக் காப்பீட்டின் மூலம் ஈடுகட்டலாம். எனவே பணத்தை பற்றி கவலைப்படாமல் செலவுகளை எவ்வாறு மீட்டெடுப்பது என்று சிந்திக்கலாம்.