A Oneindia Venture
bredcrumb

அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கு பயண காப்பீடு ஏன் முக்கியத்துவம் தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Tuesday, August 13, 2024, 17:04 [IST]

உயிர் காப்பீடு, வாகன காப்பீடுகள் போல, அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயண காப்பீடு அவசியமான ஒன்று. பயணத்தின் போது சில சூழ்நிலை காரணமாக நமது உடமைகளுக்கு அல்லது நமது பணத்துக்கு ஆபத்து ஏற்படலாம். அந்த நேரத்தில் பயணக்காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், பயணக் காப்பீட்டை பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கு பயண காப்பீடு ஏன் முக்கியத்துவம் தெரியுமா..?
1/6

விடுமுறைக்கு சுற்றுலா செல்பவர்கள் மற்றும் வியாபார வேலையாக பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு பயண காப்பீட்டு வசதி பயனுள்ளதாக இருக்கும். சாதாரண வெளிநாட்டு மருத்துவக்காப்பீடு மற்றும் முழுமையான (காம்ப்ரிஹென்சிவ்) பயணகாப்பீடு என 2 வகையான பயணகாப்பீடுகள் உள்ளன.

அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கு பயண காப்பீடு ஏன் முக்கியத்துவம் தெரியுமா..?
2/6

இந்த பயணக்காப்பீட்டின் மூலமாக பயணத்தின் போது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளை குறைத்துக்கொள்ள முடியும். நிதி இழப்பு தொகைகேற்ப, இழப்புத்தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ளுதல் அல்லது பலநாடுகளுடன் இணைக்கப்பட்ட பணமற்ற பரிமாற்ற முறை மூலமாக இழப்பீடு செய்துகொள்ள முடியும்.

அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கு பயண காப்பீடு ஏன் முக்கியத்துவம் தெரியுமா..?
3/6

மருத்துவ அவசரத் தேவையின் போது பாதுகாப்பு கிடைக்கும் என்பதே பயணக்காப்பீடு பெற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணம் ஆகும். பயணத்தின் போது மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எல்லா மருத்துவச் செலவுகளும் பயணக்காப்பீட்டில் அடங்கிவிடும்.

அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கு பயண காப்பீடு ஏன் முக்கியத்துவம் தெரியுமா..?
4/6

பயணத்தின் போது வெளிநாட்டில் எதிர்பாராத மரணம் ஏற்பட்டால், தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் செலவுகள் அதிகம். அந்தவகையில், விபத்து மரணம் அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் பயணக் காப்பீடு கூடுதல் பலனை வழங்குகிறது.

அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கு பயண காப்பீடு ஏன் முக்கியத்துவம் தெரியுமா..?
5/6
தவிர்க்கமுடியாத சூழலில் திட்டமிட்ட விடுமுறை அல்லது வேலையை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இதுபோன்ற கடைசி நிமிட ரத்து செய்தல்களுக்கு, சிறந்த வெளிநாட்டு பயணக் காப்பீட்டில் காப்பீடு செய்வது உங்கள் நிதிச் சுமையைக் குறைக்கும்.
அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கு பயண காப்பீடு ஏன் முக்கியத்துவம் தெரியுமா..?
6/6

பயணத்தின் போது உங்களுடைய உடமைகள் தாமதமாக கிடைப்பதற்கோ அல்லது உடமைகள் காணாமல் போவதற்கோ வாய்ப்புகள் உண்டு. அத்தகைய சூழலில் வெளிநாட்டில் தங்கும் போது உங்களுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளும் பயணக்காப்பீட்டில் அடங்கிவிடும். நீங்கள் வேறுநாட்டில் தரையிறங்கி, 6 மணி நேரத்திற்குள் உங்களுடைய உடமைகள் கிடைக்காவிட்டால், அது தொலைந்து விட்டதாக கருதப்பட்டு, அந்த நாட்டில் உங்களுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளும் ஈடுசெய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+