A Oneindia Venture
bredcrumb

பங்குகளில் முதலீடு செய்வதற்கு கணக்கிடப்படும் பீட்டா மதிப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!

By Sidhanathan K
| Published: Thursday, August 29, 2024, 12:49 [IST]

பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் அப்பங்கின் ஆபத்தையோ அல்லது ஒட்டுமொத்த பங்குகளின் ஏற்ற இறக்கங்களையோ குறிக்க பயன்படுத்தப்படும் முக்கிய குறியீட்டெண் தான் பீட்டா மதிப்பு ஆகும். முதலீட்டாளர்களால் இந்த குறிகாட்டி பரவலாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், பங்குச் சந்தை வல்லுநர்கள் ஒரு பங்கின் அபாய அளவை தீர்மானிக்க பீட்டா மதிப்பை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

பங்குகளில் முதலீடு செய்வதற்கு கணக்கிடப்படும் பீட்டா மதிப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
1/5

பொதுவான வரையறையின் படி, பங்கின் ஏற்ற இறக்கத்தை பொருத்து அதன் பீட்டா மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு முன்னிருப்பு அளவாக பீட்டா மதிப்பு ஒன்று (beta value 1) ஒதுக்கப்படும்.

பங்குகளில் முதலீடு செய்வதற்கு கணக்கிடப்படும் பீட்டா மதிப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
2/5

சந்தையின் ஏற்ற இறக்கத்துடன் ஒப்பிடுகையில், பங்கின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தால் அதன் பீட்டா மதிப்பு 1ஐ விட கூடுதலாக இருக்கும். அவ்வாறான பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்து மிகுந்தது. அதே நேரத்தில் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்தால் கூடுதல் இலாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. அதாவது, அப்பங்கு அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும் என்றும், மாற்றத்தக்க பணம் குறைந்த அளவில் கிடைக்கும் என்பதையும் குறிப்பிட இம்மதிப்பீடு பயன்படுகிறது.

பங்குகளில் முதலீடு செய்வதற்கு கணக்கிடப்படும் பீட்டா மதிப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
3/5

சந்தையின் ஏற்ற இறக்கத்துடன் ஒப்பிடுகையில், பங்கின் ஏற்ற இறக்கம் குறைவாக இருந்தால் அதன் பீட்டா மதிப்பு 1ஐ விட குறைவாக அளவிடப்படும். அவ்வாறான பங்குகளில் முதலீடு செய்வது குறைந்த ஆபத்தை பிரதிபலிப்பதாய் உள்ளது. அதேபோல, குறிப்பிட்ட காலத்தில் குறைந்த இலாபமே ஈட்ட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

பங்குகளில் முதலீடு செய்வதற்கு கணக்கிடப்படும் பீட்டா மதிப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
4/5

சந்தையின் ஏற்ற இறக்கத்துடன் ஒப்பிடுகையில், பீட்டா மதிப்பு 1ஆக இருக்குமானால் பங்குகளின் விலை ஒட்டுமொத்த சந்தை நிலைமைகள் மற்றும் இயக்கத்துடன் இணைந்தே நகரும் என்பதை குறிக்கிறது. பொதுவாக சந்தை மதிப்பை குறிக்க உதவும் பங்குகளின் பீட்டா மதிப்பு 1ஆக இருக்கும்.

பங்குகளில் முதலீடு செய்வதற்கு கணக்கிடப்படும் பீட்டா மதிப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
5/5

பங்கு விலையுடன் சந்தை நிலைமைகள் மற்றும் இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லையெனில் அப்பங்குகள் ஜீரோ பீட்டா மதிப்பை கொண்டிருக்கும். பீட்டா மதிப்பு பங்கு பகுப்பாய்வு நடவடிக்கைகளிலும், விலை இடரை கணக்கிடவும் பயன்படுத்தப்படுகிறது. எனினும், பீட்டா மதிப்பீடு சில கட்டுப்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.