A Oneindia Venture
bredcrumb

நிலையான முதிர்வு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!

By Sidhanathan K
| Published: Sunday, August 18, 2024, 18:22 [IST]

நிலையான முதிர்வு திட்டம் (FMP) என்பது குளோஸ்டு-என்டெடு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இவ்வாறான திட்டங்களின் முதலீட்டுத் தொகையானது, டிரெஷரி பில்கள், வைப்புச் சான்றிதழ்கள், வர்த்தக பத்திரங்கள் (CPs), பொது நிறுவன மற்றும் அரசு முதலீட்டு பத்திரங்கள் ஆகிய கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் யூனிட்டுகளை முதிர்வு தேதிக்கு முன் விற்பனை செய்ய முடியாது.

நிலையான முதிர்வு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
1/5

எஃப்எம்பி திட்டங்கள் பல்வேறு முதிர்வு கால அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இவை 30 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். எனவே, முதலீட்டுக்கால விருப்ப அடிப்படையில், பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்யலாம்.

நிலையான முதிர்வு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
2/5

இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் சில கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், சில ஒழுங்குமுறையற்ற வரிவிதிப்புகளை தடுக்க, முதலீட்டுத் தொகையின் சராசரி நிகர சொத்து மதிப்பில் (என்ஏவி) சில சதவிகிதங்கள் கட்டணமாக கொடுக்க வேண்டும்.

நிலையான முதிர்வு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
3/5

எதிர்பார்க்கப்படும் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், FMP திட்டத்திலிருந்து பெறக்கூடிய வருமானம் முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. திட்டச் செலவுகளுக்கு விதிக்கப்படும் மற்ற கட்டணங்களை கணக்கிடுவதன் மூலம், ஒரு FMP திட்டத்தின் லாபத்தை மதிப்பிட முடியும். இந்த செலவுகள் வழங்கப்படாவிட்டால், FMP சராசரி செலவு விகிதம் கழிக்கப்பட்டு ஆண்டு லாபம் தீர்மானிக்கப்படுகிறது.

நிலையான முதிர்வு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
4/5

எஃப்எம்பி என்பது அதிக வரி-சாதகமான திட்டமாகும். ஒரு வருடத்திற்கும் மேலான முதிர்வுகாலம் கொண்ட FMP திட்டத்தில், முதலீட்டாளர்களுக்கு குறியீட்டு பலன் (benefit of indexation) வழங்கப்படும். அதாவது, கிடைக்கும் லாபம் பணவீக்கத்திற்கு எதிராக சரிசெய்யப்படும். அதிக பணவீக்கம் உள்ள காலங்களில், குறியீட்டின் நன்மை அதிகமாக இருப்பதால், மூலதன வரி விலக்கு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

நிலையான முதிர்வு திட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
5/5

எனவே, அதிக வருமான வரி வரம்புக்குட்பட்டவர்களுக்கு FMP திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் வங்கி நிலையான வைப்புகளிலிருந்து (FDகள்) பெறப்படும் வட்டி மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு வருமான வரி மதிப்பிடப்படுகிறது. மாறாக, ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்வு கொண்ட FMP திட்டங்களுக்கு உரிய விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+