A Oneindia Venture
bredcrumb

பார்ம் 16 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!

By Sidhanathan K
| Updated: Wednesday, August 7, 2024, 18:11 [IST]

ஒரு நிறுவனத்திடம் மாத ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களுடைய வரியை செலுத்தும் போது பயன்படுத்தும் முக்கியமான படிவம் தான் படிவம் 16 (Form 16). இவ்வாறு பார்ம் 16 பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே காணலாம்.

பார்ம் 16 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
1/5

இந்த படிவத்தில் அந்த பணியாளருடைய மொத்த வருமானம், மேல் வருமானம், பல்வேறு சலுகைகள் மற்றும் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி ஆகிய அனைத்து விபரங்களும் இருக்கும்.

பார்ம் 16 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
2/5
ஒரு பணியாளர் நிறுவனத்தை மாற்றும் போது, அவர் தனது முந்தைய நிறுவனம் மற்றும் தற்போதைய நிறுவனத்தில் இருந்து படிவம் 16 ஐ ஆண்டு இறுதிக்குள் பெற வேண்டும். இந்த 2 படிவங்களின் உதவியுடன் மட்டுமே அவர் அந்த ஆண்டிற்கான வரியை செலுத்த முடியும்.
பார்ம் 16 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
3/5

ஒரு தனிநபர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் வேலை செய்யும்போது அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட படிவம் 16-ஐ பெற வேண்டும். அதாவது, ஒருவர் ஒரே நிதியாண்டில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், அந்த 2 நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற வருமானத்தை மொத்தமாகக் கூட்டி கணக்கிட்டு, அதற்கான வரியை செலுத்த வேண்டும்.

பார்ம் 16 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
4/5
ஒருவேளை வேலை செய்த நிறுவனத்திடமிருந்து படிவம் 16-ஐ பெறமுடியாத பட்சத்தில், அந்நிறுவனம் கொடுக்கும் சம்பள விபரத்தில் (Salary slip) இருக்கும் தகவல்களை பயன்படுத்தி வரி செலுத்தலாம்.
பார்ம் 16 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
5/5

உங்களுடைய முந்தைய நிறுவனத்தினரின் படிவம் 16-ஐ தற்போதைய நிறுவனத்தினரிடம் நீங்கள் கொடுக்க விரும்பாவிட்டால், இரு நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற படிவம் 16 குறிப்பைப் பயன்படுத்தி வரி செலுத்தலாம். அதேபோல், படிவம் 16-ல் வேலை செய்த அல்லது செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.