A Oneindia Venture
bredcrumb

மியூச்சுவல் ஃபண்டு என்ஏவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!

By Sidhanathan K
| Published: Tuesday, August 20, 2024, 16:10 [IST]

முதலீடு செய்வதற்கான சிறந்த திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்டு திட்டமும் ஒன்று. இத்திட்டங்களினால் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில், மியூச்சுவல் ஃபண்டு என்ஏவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டு என்ஏவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
1/5
மியூச்சுவல் ஃபண்ட் நிகர சொத்து மதிப்பு (NAV) என்பது இத்திட்டத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பாகும். அதாவது, ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் செயல்திறனை தீர்மானிக்க முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படும் மெட்ரிக்குகளில் ஒன்றாகும். மியூச்சுவல் ஃபண்டின் இறுதி வருமானம் என்ஏவி-யின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகள் என்ஏவி மதிப்பை கணக்கிடுவதற்கு, செபியினால் (SEBI) பரிந்துரைக்கப்பட்டுள்ள என்ஏவி கணக்கீடு சூத்திரத்தை உபயோகித்து வருகின்றன.
மியூச்சுவல் ஃபண்டு என்ஏவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
2/5

அந்தவகையில், என்ஏவி என்பது ஃபண்டின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பிலிருந்து அதன் மொத்த கடன் தொகைகளை கழித்தது போக மீதமுள்ள தொகையை, நிலுவையில் இருக்கக்கூடிய ஃபண்டு யூனிட்களின் எண்ணிக்கையை கொண்டு வகுத்தால் வரக்கூடிய தொகை ஆகும். ஃபண்டு மதிப்பு தினசரி மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை என்பதால், என்ஏவி மதிப்பும் அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும். இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான என்ஏவி கணக்கிடப்பட்டு, இரவு 9 மணிக்குள் இணையதளங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று செபி கட்டாயப்படுத்தியுள்ளது.

மியூச்சுவல் ஃபண்டு என்ஏவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
3/5
எனவே, அனைத்து வாங்குதல் மற்றும் விற்பனை ஆணைகளும் டிரேடிங் தேதியின் என்ஏவி-யில் ஒரு கட்-ஆஃப் நேரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக, கட்-ஆஃப் நேரம் 1:30 PM ஆக இருந்தால், 1:30 PM க்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து வாங்குதல் அல்லது விற்பனை ஆர்டர்களும் அதே நாளின் என்ஏவி-யில் கணக்கிடப்படும். கட்-ஆஃப்பிற்கு பின்னர் பெறப்பட்ட ஆர்டர்கள் அடுத்த வணிக நாள் செயல்முறைப்படுத்தப்படும்.
மியூச்சுவல் ஃபண்டு என்ஏவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
4/5

நீங்கள் 10 ரூபாய் முக மதிப்பு (Face Value) கொண்ட ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை சுமார் 100 யூனிட்களுக்கு சப்ஸ்கிரைப் செய்திருக்கும் பட்சத்தில், சுமார் 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஃபண்டு திட்டமானது, பங்குகள் மற்றும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திருந்தால், அதன் என்ஏவி மதிப்பு உயரும் அல்லது சரியும். அவ்வாறு என்ஏவி மதிப்பு 11 ரூபாய்க்கு உயர்ந்தால், உங்கள் போர்ட்ஃபோலியோ மதிப்பானது 100 யூனிட்கள் x 11 = 1100 ரூபாய் ஆக இருக்கும். இதன் மூலம் சுமார் 100 ரூபாய் லாபம் அடையலாம்.

மியூச்சுவல் ஃபண்டு என்ஏவி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
5/5
செபியின் விதிமுறைப்படி, ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் என்ஏவி மதிப்பானது 1 வார காலத்திற்குள் கணக்கிடப்பட்டு, குறைந்தது 2 தின பத்திரிக்கைகளிலாவது அறிவிக்கப்பட வேண்டும். மேலும், சில வரையறைக்குட்பட்ட திட்டங்கள் மற்றும் சில மாத வருவாய் திட்டங்கள் போன்றவை என்ஏவி மதிப்பை காலாண்டு அல்லது மாதாந்தர இடைவெளிகளில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.