A Oneindia Venture
bredcrumb

ஜீரோ லையபிலிட்டி கார்டுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!

By Sidhanathan K
| Published: Thursday, August 15, 2024, 15:48 [IST]

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொலைந்து போகும்பட்சத்தில் அந்த கார்டை பிளாக் செய்து விட்டு புதிய கார்டு வழங்க உடனடியாக கோரிக்கை எழுப்ப வேண்டும். இந்த சூழலில் ஜீரோ-லையபிலிட்டி கார்டு பாலிசி நமக்கு உதவுகிறது. அந்தவகையில், ஜீரோ-லையபிலிட்டி கார்டு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

ஜீரோ லையபிலிட்டி கார்டுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
1/5
நமது கார்டு தொலைந்துபோய், அதை யாரேனும் சட்டவிரோதமாக பயன்படுத்தி ஏதாவது வணிகத்தில் ஈடுபட்டால், அந்த அட்டையை வழங்கிய வங்கி, நடந்த திருட்டு பரிவர்த்தனை தொகையை நமக்கு செலுத்தும். ஆனால், இந்த திருட்டு பரிவர்த்தனை குறித்து வங்கி விசாரணை மேற்கொண்ட பிறகு தான் அதற்கான தொகை நமது வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும்.
ஜீரோ லையபிலிட்டி கார்டுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
2/5

ஒருவேளை நாம் அங்கீகரிக்கப்பட்ட நபர் அனுமதியின்றி அந்த கணக்கை பயன்படுத்தியதாக வங்கி கண்டறிந்தால், ஜீரோ லையபிலிட்டி கோரிக்கை செல்லுபடியாகாது. முதலில் நமது வங்கியில் இந்த ஜீரோ-லையபிலிட்டி கார்டு கொள்கை வசதி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட வங்கிகள் இந்த சேவையினை வழங்குகின்றன.

ஜீரோ லையபிலிட்டி கார்டுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
3/5
இந்த திருட்டு பரிவர்த்தனை குறித்து புகாரளிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டால் இந்த வசதியை நம்மால் பயன்படுத்த முடியாமல் போகலாம். இப்படியான திருட்டு அடிக்கடி நடந்திருக்கக் கூடாது. அப்போதுதான் அதன் பலன் முழுமையாக நம்மை சேரும். அதாவது, கடந்த ஒரு வருடத்தில் 2 முறைக்கு மேல் இதுபோன்ற திருட்டு குறித்து புகார் அளித்திருக்கக் கூடாது.
ஜீரோ லையபிலிட்டி கார்டுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
4/5
இதில் உள்ள மிகப்பெரிய பயன் என்னெவென்றால், இந்த வசதியை கொண்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டு திருடு போனதை வங்கியில் தெரியப்படுத்தி விட்டால், அந்த கார்டை கொண்டு எந்த ஒரு வணிகமும் செய்ய முடியாதபடி பிளாக் செய்யப்படும்.
ஜீரோ லையபிலிட்டி கார்டுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
5/5
அதுவே, ஒரு டெபிட் கார்டு என்றால் அதனை வைத்து வேறு யாராவது வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் அப்பணம் மீண்டும் நமது கணக்கில் வரவு வைக்கப்படும்.இருப்பினும், திருட்டுக்கான காப்பீட்டுத் தொகையை வங்கி செலுத்த வேண்டியிருப்பதால், பல வங்கிகள் இன்னும் இந்த சேவையை வழங்கவில்லை.