A Oneindia Venture
bredcrumb

புது கார் வாங்க கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!

By Sidhanathan K
| Published: Tuesday, August 13, 2024, 17:00 [IST]

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல வகையான கார் கடன் திட்டங்களை வழங்குகின்றன. இத்தகைய நிதித் திட்டங்கள் பல்வேறு வட்டி விகிதங்கள் மற்றும் கால நிலைகளில் கிடைக்கின்றன. அத்தகைய கடனை பெறும்போது நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம்.

புது கார் வாங்க கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
1/5

வங்கிகளின் விதிப்படி, செயலாக்கக் கட்டணமாக ஸ்டாம்ப் டூட்டி மற்றும் இதர ஆவண கட்டணம் போன்றவை கடன் தொகையை பொறுத்து வசூலிக்கப்படும்.

புது கார் வாங்க கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
2/5

அதிகபட்ச கடன் தொகையானது காரின் விலை, மாடல், வாடிக்கையாளரின் வேலைவாய்ப்பு மற்றும் வருமான விவரங்கள் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்தது. வருமான ஆதாரமான சம்பள சீட்டுகள் (Pay slips) அல்லது கடந்த 2-3 ஆண்டுகளாக செலுத்திய வருமான வரி சான்றிதழ்களுடன் அடையாள சான்றுகளை மற்றும் முகவரி சான்று இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

புது கார் வாங்க கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
3/5

வட்டி விகிதம் ஆனது வட்டி வகை மற்றும் கடன் காலம் பொருத்து இருக்கும். கடன் காலம் 3 முதல் 15 வருடங்கள் வரையிலான கடன்கள் உள்ளன.

புது கார் வாங்க கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
4/5

புதிய கார்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்கள், பழைய கார்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முறையான கடன் ஆவணங்களைச் சமர்ப்பித்தால், கார் கடன் 1 முதல் 2 நாட்களுக்குள் வழங்கப்படும்.

புது கார் வாங்க கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!!
5/5

கடன்வாங்குபவர் அசல் பதிவு சான்றிதழ், விலைப்பட்டியல் மற்றும் வாகன காப்பீட்டு பாலிசி ஆகிய ஆவணங்களின் நகல்களை மட்டும் நிதி நிறுவனங்களுக்கு அளித்தால் போதுமானது. சில நிதி நிறுவனங்கள் இதை தங்களிடம் வைத்து கொள்வர்.