A Oneindia Venture
bredcrumb

இந்தியாவில் வைரம் எவ்வாறு மதிப்பிடுகிறது தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Sunday, September 1, 2024, 17:22 [IST]

வைரத்தின் மதிப்பீடு என்பது அதன் தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அதாவது, வைரத்தின் தெளிவு, வடுக்கள், மற்றும் கடினத்தன்மையை ஆதாரமாகக் கொண்டு அவற்றின் தரம் பிரிக்கப்படுகிறது.

இந்தியாவில் வைரம் எவ்வாறு மதிப்பிடுகிறது தெரியுமா..?
1/5

வைரத்தின் தெளிவு அதிகம் எனில் அதில் உள்ள வடுக்கள் குறைவு என அர்த்தம். அத்தகைய வைரங்கள் மதிப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. வைரத்தை வாங்கும் முன் ஒரு தொழில்முறை வல்லுனரிடம் கருத்து கேட்க வேண்டும். ஏனென்றால், இதை ஒரு நிபுணரால் மட்டுமே கணிக்க முடியும்.

இந்தியாவில் வைரம் எவ்வாறு மதிப்பிடுகிறது தெரியுமா..?
2/5

அவ்வாறு இல்லையெனில் பொதுவாக வைர கொள்முதல் சம்பந்தப்பட்ட "சி" ஐ பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். வைரம் வாங்குபவர் இந்த காரணியை பற்றி முழு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், ஏராளமான முதலீட்டாளர்கள் இந்த காரணியின் அடிப்படையில் ஏமாற்றப்படுகிறார்கள்.

இந்தியாவில் வைரம் எவ்வாறு மதிப்பிடுகிறது தெரியுமா..?
3/5

நிறமற்ற வைரங்கள் சில செயற்கையான நடைமுறைகளுக்கு பின்னர் மதிப்பு கூட்டப்படுகின்றன. வடுக்கள் மற்றும் வெட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு அந்த வைரத்தை குறைபாடற்ற வைரமாக மாற்றுகின்றன. இது `பிராக்சர் பிள்ளிங்க்' (fracture filling) என்கிற முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் வைரம் எவ்வாறு மதிப்பிடுகிறது தெரியுமா..?
4/5

இந்த முறைக்கு பின் ஒளி அந்த வைரத்தின் வழியே நன்கு கடந்து சென்றால் அது வைரத்தின் தெளிவை அதிகரிக்கும். வைர வெட்டு சிறப்பாக இருந்தால் அதன் விலையும் மிக அதிகம். இந்த வெட்டு வைரத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த வைர வெட்டு சில நேரங்களில் வைரத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி வைரத்தின் நிறத்தை அதிகரிக்க பயன்படுகிறது.

இந்தியாவில் வைரம் எவ்வாறு மதிப்பிடுகிறது தெரியுமா..?
5/5

சான்றளிக்கப்பட்ட வைரத்துண்டுகள் பிற வைரங்களை விட உண்மையானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகின்றன. வைரத்திற்கு சர்வதேச ஜெம்மாலஜிக்கல் ஆய்வகங்கள் மற்றும் நிறுவனம் (IGL &I), மற்றும் ஜியா, மும்பை போன்ற நிறுவனங்கள் சான்றளிக்கின்றன. சான்றளிக்கபட்ட வைரத்தின் விலை பிற வைரங்களை விட சற்று அதிகமாகும். மேலும், சான்றளிக்கப்பட்ட வைரத்தின் உண்மையான மதிப்பை அதன் சான்றிதலின் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+