A Oneindia Venture
bredcrumb

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் சரியான முகவரை எப்படி தேர்ந்தெடுப்பது..?

By Sidhanathan K
| Published: Wednesday, September 4, 2024, 12:18 [IST]

புதிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்திருப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் முக்கிய காரியம் மிகச் சரியான பங்குச் சந்தை முகவரை (Stock Brokers) தேர்ந்தெடுப்பதாகும். அந்தவகையில், நல்ல முகவர்களை தேர்ந்தெடுக்க இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் சரியான முகவரை எப்படி தேர்ந்தெடுப்பது..?
1/5

பங்குச் சந்தை முகவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, அந்நிறுவனங்களின் பணி அமைப்பை ஆராய வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் பங்குகளை பரிவர்த்தனை செய்ய 0.01 சதவீத கமிசனை மட்டுமே பெறுவார்கள். ஒரு சில நிறுவனங்கள் 0.10 சதவீத கமிசனை பெறுவார்கள். குறிப்பாக, வங்கிகள் நடத்தும் முகவர் பணி செய்யும் நிறுவனங்கள் 10 மடங்கு அதிகமான கமிசனை பெறுவார்கள்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் சரியான முகவரை எப்படி தேர்ந்தெடுப்பது..?
2/5

ஒரு சில நிறுவனங்கள் மிகச் சிறந்த சேவைகளை வழங்குவார்கள். குறிப்பாக வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் சிறப்பாக சேவை செய்வார்கள். இந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் அனுப்பி, வங்கி கணக்கு தொடங்குவது முதல் மற்ற அனைத்து தேவைகளுக்கும் உதவி செய்வார்கள்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் சரியான முகவரை எப்படி தேர்ந்தெடுப்பது..?
3/5

பெரும்பாலான பங்குச் சந்தை முகவர் நிறுவனங்கள், ஆய்வு செய்வதற்கான வசதிகளை வழங்குகின்றன. எனினும் பல நிறுவனங்கள் இத்தகைய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. புதிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால், பங்குச் சந்தையை பற்றிய ஆய்வு மற்றும் குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே, பங்குச் சந்தையை பற்றிய ஆய்வு அறிக்கையை அனுப்பும் முகவர் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் சரியான முகவரை எப்படி தேர்ந்தெடுப்பது..?
4/5

பல பங்குச் சந்தை முகவர் நிறுவனங்கள் மிகவும் குழப்பமான பங்கு வர்த்தக சாஃப்ட்வேரை வைத்திருக்கின்றன. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த சாஃப்ட்வேருக்குள் சென்றால் குழப்பம்தான் ஏற்படும். எனவே, மிகவும் எளிமாயான சாஃப்ட்வேரை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் சரியான முகவரை எப்படி தேர்ந்தெடுப்பது..?
5/5

பங்குப் பரிவர்த்தனைகள் அனைத்தும் எலக்ட்ரானிக் சேவைகள் மூலம் செய்யப்படுவதால், முகவர் சேவை மையங்கள் நமது வீடுகளுக்கு அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, சிறந்த முகவரை தேர்ந்தெடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சாமர்த்தியமானது.