A Oneindia Venture
bredcrumb

ஒருவருடைய ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி..?

By Sidhanathan K
| Published: Sunday, August 11, 2024, 15:40 [IST]
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய ஆதார் அட்டையில் ஒருவரின் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் முகவரி தொடர்பான தகவல்கள் உள்ளன. தனிப்பட்ட 12 இலக்க எண்ணைக் கொண்ட ஆதார் அட்டை, அரசு சேவைகள், வங்கிச் சேவைகள் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில், சிலர் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்துகிறார்களா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
ஒருவருடைய ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி..?
1/5

ஸ்டெப் 1:

ஒருவருடைய ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முதலில் மொபைல் ஃபோனில் அதிகாரப்பூர்வ mAadhaar அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். UIDAI-ஆல் உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், ஆதார் தொடர்பான சேவைகளை நிர்வகிக்கவும், சரிபார்க்கவும் உதவுகிறது.

ஒருவருடைய ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி..?
2/5

ஸ்டெப் 2:

அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்ததும், ஆதார் அட்டை விவரங்களை சரிபார்க்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது ஆதார் எண்ணை கைமுறையாக உள்ளிடவும் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் ஆதார் கார்டின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக மிகவும் எளிய வழியான QR குறியீட்டை ஸ்கேன் செய்வதை தேர்ந்தெடுக்கவும்.

ஒருவருடைய ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி..?
3/5
ஸ்டெப் 3:
QR குறியீட்டை ஸ்கேன் செய்ய mAadhaar அப்ளிகேஷனில் உள்ள ஸ்கேனர் விருப்பத்தை பயன்படுத்தவும். இதில் ஆதார் கார்டு உண்மையானதா இல்லையா என்ற விவரங்களை mAadhaar அப்ளிகேஷன் உங்களுக்கு வழங்கும்.
ஒருவருடைய ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி..?
4/5

ஸ்டெப் 4:

mAadhaar அப்ளிகேஷன் தவிர, ஆதார் நம்பரை நேரடியாகச் சரிபார்க்க மாற்று வழியாக அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தை பார்வையிடலாம்.

ஒருவருடைய ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி..?
5/5
இந்த ஸ்டெப்களை பின்பற்றுவதன் மூலம், வழங்கப்படும் ஆதார் அட்டை உண்மையானதா என்பதை கண்டுபிடித்து மோசடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+