A Oneindia Venture
bredcrumb

வங்கிகளில் நிலத்தின் மீதான கடனை பெறுவது எப்படி..?

By Sidhanathan K
| Published: Monday, August 5, 2024, 12:14 [IST]
20 வயதை கடந்த அனைத்து இந்திய குடிமகன்களும் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடம் நிலக்கடன்களை பெறலாம். அந்தவகையில், நிலக்கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
வங்கிகளில் நிலத்தின் மீதான கடனை பெறுவது எப்படி..?
1/5

இந்தியாவில் வசிப்பவர்கள் என்றால், ஒரு இடத்தை வீடு கட்டுவதற்கு வாங்கினாலும் சரி, அல்லது வருங்கால முதலீட்டிற்காக வாங்கினாலும் சரி, அவர்களுக்கு நிலக்கடன் வழங்கப்படும். நிலக் கடனுக்காக விண்ணப்பிக்கிறோம் என்றால், வாங்கக்கூடிய இடம் குடியிருப்பு இடமாக இருக்க வேண்டுமே தவிர, விவசாய இடமாகவோ அல்லது வணிக ரீதியான நிலமாகவோ இருக்கக்கூடாது. அதே போல, அந்த நிலம் மாநகராட்சி அல்லது நகராட்சி எல்லைக்குள் இருந்தாக வேண்டும்.

வங்கிகளில் நிலத்தின் மீதான கடனை பெறுவது எப்படி..?
2/5
நிலக்கடனுக்கு அதிகப்படியாக நகர்ப்புறத்தில் உள்ள நிலத்தின் மதிப்பின் மீது 70 சதவீதம் வரை கடன் அளிக்கப்படும். சிறிய நகரங்கள் என்றால், நிலக்கடனுக்கான அதிகப்படியான எல்.டி.வி. வீதம், நிலத்தின் மொத்த மதிப்பில் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் நிலக்கடன் மூலமாக ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்தால், நிலத்தின் மதிப்பிலிருந்து 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உங்கள் கையிலிருந்து கட்டியாக வேண்டும்.
வங்கிகளில் நிலத்தின் மீதான கடனை பெறுவது எப்படி..?
3/5
நிலக்கடன் என்பது வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடனில் ஒரு அங்கமாக இருந்தாலும் கூட, இக்கடனை அடைக்கும் தொகையின் மீது வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது. இருப்பினும், நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கி விட்டால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு வரி விலக்குகளை பெறலாம். இருப்பினும், கட்டுமானப் பணிகள் முடிவடைந்த வருடத்தில் தான் இந்த வரிவிலக்கு பொருந்தும்.
வங்கிகளில் நிலத்தின் மீதான கடனை பெறுவது எப்படி..?
4/5

நிலக் கடனைப் பெற, உங்களின் தகுதி அடிப்படையை பொறுத்து, உங்கள் அடையாளத்தையும், முகவரிச் சான்று விவரங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்கள் தங்கள் சம்பளச் சீட்டை (PaySlip) வருமானச் சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக, வரவுகளை காட்டும் சமீபத்திய 6 மாத பேங்க் ஸ்டேட்மென்ட் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கிகளில் நிலத்தின் மீதான கடனை பெறுவது எப்படி..?
5/5

இது தவிர, இடத்தை விற்பவரின் பெயரில் உள்ள நில உரிமை ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வில்லங்கம் இல்லையென்ற சான்றிதழ், உடைமை சான்றிதழ், இடம் சான்றிதழ் மற்றும் கடந்த 15 வருடங்களுக்கான ஆவணங்கள் போன்றவை இதில் அடங்கும்.