A Oneindia Venture
bredcrumb

ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி..?

By Sidhanathan K
| Published: Sunday, August 11, 2024, 15:44 [IST]

இந்தியாவில் பண பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களுக்கு பான் கார்டு அவசியம். பெயர், பெற்றோரின் பெயர், வீட்டு முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற பான் கார்டில் ஏதேனும் மாற்றம் அல்லது திருத்தம் செய்ய வேண்டுமானால், ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் புதுப்பிக்கலாம்.

ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி..?
1/5

ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய:

அப்டேட் செய்வதற்கு முதலில் இந்தியாவில் பான் கார்டு சேவைகளுக்கான 2 அதிகாரப்பூர்வ அரசாங்க இணையத்தளங்களான NSDL அல்லது UTIITSL இணையதளத்திற்கு செல்லவும்.

ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி..?
2/5

வரும் பக்கத்தில் "Changes or Correction in PAN Data" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை நிரப்பவும்.

ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி..?
3/5

அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை அப்லோட் செய்யவும். இந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி..?
4/5

படிவத்தை பூர்த்தி செய்து ஆவணங்களை அப்லோட் செய்த பிறகு, படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். சில சமயங்களில், உங்கள் ஆவணங்களின் ஜெராக்ஸ் காபியை செயலாக்க மையத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும். தேவைப்பட்டால் இந்த செயல்முறையையும் சேர்த்து முடிக்கவும்.

ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி..?
5/5

பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வதற்கு தேவையான உங்களின் தற்போதைய பான் கார்டின் ஜெராக்ஸ் காபி, அடையாளச் சான்றாக, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது ரேஷன் அட்டை போன்றவை, முகவரி ஆதாரத்திற்காக ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, சொத்து வரி ரசீதுகள் அல்லது மின் பயன்பாட்டு பில்கள் போன்றவை மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பிறப்புச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்துக்கொள்வது அவசியம்.