A Oneindia Venture
bredcrumb

ஹூண்டாய் கொடுத்த ஏமாற்றம்.. மாருதி, டாடா கெத்து..!!

By Sidhanathan K
| Published: Tuesday, October 22, 2024, 19:22 [IST]
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்குகள் செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பலவீனமான நிலையில் பிறகு கிட்டத்தட்ட 5% குறைந்து ரூ.1,844.6 ஆக வர்த்தகமானது.

ஹூண்டாய் கொடுத்த ஏமாற்றம்.. மாருதி, டாடா கெத்து..!!
1/6
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்கு, தேசிய பங்குச்சந்தையில் ரூ.1,934 இல் அறிமுகமானது, இது IPO விலையான ரூ.1,960 ஐ விட ரூ.26 அல்லது 1.3% சரிவை குறிக்கிறது.
ஹூண்டாய் கொடுத்த ஏமாற்றம்.. மாருதி, டாடா கெத்து..!!
2/6
இதற்கிடையில், உலகளாவிய ப்ரோகரேஜ் நிறுவனமான நோமுரா ஹூண்டாய் மோட்டாருக்கு 'BUY' என்கிற மதிப்பீட்டையும் ரூ.2,472 டார்கெட் விலையையும் கொடுத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஹூண்டாய் கொடுத்த ஏமாற்றம்.. மாருதி, டாடா கெத்து..!!
3/6
இதேபோல் மேக்வரி நிறுவனமும் ஹூண்டாய் மோட்டாருக்கு 'Outperform' என்கிற மதிப்பீட்டையும் ரூ.2,235 என்ற டார்கெட் விலையையும் கொடுத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
ஹூண்டாய் கொடுத்த ஏமாற்றம்.. மாருதி, டாடா கெத்து..!!
4/6
ரூ.27,870 கோடி மத்தியிலான ஹூண்டாய் இந்தியா IPO 2.3 மடங்கு பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் சப்ஸ்கிரைப் செய்தனர்.
ஹூண்டாய் கொடுத்த ஏமாற்றம்.. மாருதி, டாடா கெத்து..!!
5/6
இந்த ஐபிஓ-வில் மொத்தம் 14.2 கோடி பங்குகளை விற்பனை செய்தது அதன் முழு உரிமையாளரும், தாய் நிறுவனமுமான ஹூண்டாய் மோட்டார் குளோபல்.
ஹூண்டாய் கொடுத்த ஏமாற்றம்.. மாருதி, டாடா கெத்து..!!
6/6
IPO-யில் இருந்து கிடைக்கும் முழு தொகையும் அதன் தாய் நிறுவனமான தென்கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் குளோபல் நிறுவனத்திற்கு சென்றாலும், இந்த நிதியில் பெரும் பகுதி இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதிய கார் தயாரிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.