A Oneindia Venture
bredcrumb

கடன் பத்திரத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டவில்லை என்றால் செல்லுபடியாகுமா..?

By Sidhanathan K
| Published: Friday, May 24, 2024, 12:40 [IST]
சேகரிக்கப்பட்ட வரிகள் மற்றும் வசூலிக்கப்படும் கட்டணங்களை குறிக்க வருவாய் முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. வரி முத்திரை, நிதி முத்திரை என்றெல்லாம் அழைக்கப்படும் ரெவின்யூ ஸ்டாம்ப் எங்கு, எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
revenue stamp
1/7
வருவாய் முத்திரை (Revenue stamp) என்பது பொதுவாக ஆவணங்கள், கடன் பத்திரங்கள், புகையிலை, மதுபானம், போதைப்பொருள், துப்பாக்கி பதிவு மற்றும் பலவற்றில் வசூலிக்கப்படும் வரிகள் அல்லது கட்டணங்களை குறிக்க ஒட்டப்படும் முத்திரையாகும். இது தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ அமைப்புகளால் வழங்கப்படுகிறது.
revenue stamp
2/7
கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட் அல்லது ரசீதில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். மத்திய அரசின் சட்டப்படி, வழங்கப்படும் ரசீதுகளுக்கு (Receipts), 1 ரூபாய் மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். வருவாய் முத்திரைகள் 1 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை கிடைக்கின்றன. வருவாய் முத்திரைகளை தபால் அலுவலகங்களில் வாங்கலாம்.
revenue stamp
3/7

அந்த பணமதிப்பு 5,000 ருபாய்க்கு மேல் இருந்தால் அந்த எழுத்துப்பூர்வ ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதற்கு குறைவான மதிப்புள்ள தொகைக்கு ரசீது கொடுத்தால் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்டத் தேவையில்லை. ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல் வாங்கி இருந்து, அதை சாட்சியமாக கொடுக்க நேர்ந்தால் அப்போது அதற்கு அபராத தொகை கட்டி அதை சரிசெய்தும் கொள்ளலாம்.

revenue stamp
4/7

கடன் கொடுப்பவர், கடனாளியின் பெயர், முகவரி, பணம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றை எழுதி இறுதியில் வருவாய் முத்திரை ஒட்டி அதன் மேல் கையெழுத்து வாங்குவார். கடன் பத்திரத்தில் ஒட்டப்படும் வருவாய் முத்திரையில் கையொப்பமிட்டால் மட்டுமே அந்த பத்திரம் செல்லுபடியாகும். ஸ்டாம்பின் மேல் மட்டுமே கையெழுத்திட வேண்டும்.

revenue stamp
5/7

ஒருவேளை ஸ்டாம்ப் இல்லாத இடத்தில் கையொப்பம் இடப்பட்டால் அந்த பிராமிசரி நோட் செல்லாது. பணம் பெறுபவர் அவ்வளவு தொகையை வாங்கவில்லை என்று கூறிவிடக்கூடாது என்பதற்காக தான் இவ்வாறு ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பம் வாங்கப்படுகிறது. பணம் முழுவதையும் செலுத்திய பின்னர் கையெழுத்திட்ட பத்திரத்தை வாங்கி விடுவது நல்லது.

revenue stamp
6/7
முன்னதாக, பத்திரத்தில் 25 பைசா முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 100 பைசா (1 ரூபாய்) முத்திரை தான் ஒட்டப்படுகிறது. ஒருவேளை கடன் பெற்றவர் உறுதிமொழியை மீறும் பட்சத்தில் கடன் கொடுத்தவர் பிராமிசரி நோட்டின் உதவியோடு அவர் மீது உரிமையியல் வழக்கு தொடரலாம்.
revenue stamp
7/7
இந்திய வருமான வரித் துறையானது, வாடகைக்கு வாழும் பணியாளர்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கிறது. ஊதியம் பெரும் நபர் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) விதிக்கப்படும் வருமான வரியிலிருந்து விலக்கு கோரலாம். இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (13A) இன் கீழ் சம்பந்தப்பட்ட பணியாளர் வரியை சேமிக்க முடியும். ஊதியம் பெறும் பணியாளராக இல்லாவிட்டாலும், இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80G பிரிவின் கீழ் HRA வரி விலக்குகளை பெறலாம்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+