A Oneindia Venture
bredcrumb

நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேருவது லாபமா..?

By Sidhanathan K
| Published: Thursday, September 12, 2024, 18:35 [IST]

மிகவும் பிரபலமான நகைக்கடைகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல தங்க சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. நகைக்கடை வாடிக்கையாளர்கள் பலர் இந்தத் திட்டங்கள் மூலம் தங்கத்தை வாங்குகின்றனர். ஆனால், நகைக்கடைகள் வழங்கும் இந்த சேமிப்பு திட்டங்கள் உண்மையில் லாபமுள்ளதா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேருவது லாபமா..?
1/5

நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்கள் ஏறக்குறைய வங்கிகளில் செய்யப்படும் ரெக்கரிங் டெபாசிட் போன்றதாகும். அதாவது, ஒவ்வொரு மாதமும் நாம் டெபாசிட் செய்து வரும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வங்கியிடமிருந்து வட்டி கிடைக்கிறது.

நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேருவது லாபமா..?
2/5

ஆனால், தங்க சேமிப்புத் திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நாம் செலுத்தி வரும் தொகைக்கு நகைக் கடைகள் வட்டியை வழங்குவதில்லை. தங்க சேமிப்புத் திட்டத்தில் இருக்கும் மிக முக்கிய குறைபாடு என்னவென்றால், திட்ட காலம் முடிவுறும் 11வது மாத இறுதியில் தங்க நகைகளை வாங்க வற்புறுத்தப்படுவோம்.

நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேருவது லாபமா..?
3/5

திட்ட கால முடிவில் தங்கத்தின் விலை அதிகமாக இருந்தால், அதிகமான விலைக்கு தான் தங்கத்தை வாங்க முடியும். அந்தவகையில், இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், தங்க சேமிப்புத் திட்டங்களை வழங்கும் நகைக் கடைகளுக்கு பல நன்மைகள் உள்ளன.

நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேருவது லாபமா..?
4/5

மேலும், இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வரும் லாபம் மிகக் குறைவு. மாறாக, வங்கி வைப்பு நிதியில் சேமித்து வந்தால் அதே லாபத்தை மிக எளிதாக பெறலாம். மேலும், வங்கிகள் நமது சேமிப்பிற்கு அளிக்கும் பாதுகாப்பை நகைக்கடைகள் வழங்குவதில்லை.

நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேருவது லாபமா..?
5/5
எனவே, தங்கத்தை சேமிக்க விரும்புவோருக்கு தங்க இடிஎஃப்கள் நல்ல வருமானத்தை அளிப்பதாக கூறப்படுகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+