By
Sidhanathan K
| Published: Sunday, August 18, 2024, 18:26 [IST]
புதுமணத் தம்பதிகள் பணத்தை சேமிக்க அல்லது ஒரு நல்ல விடுமுறைக்கு செல்ல அல்லது வீடு அல்லது கார் வாங்க சிரமப்பட வேண்டியுள்ளது. பெரும்பாலும், பண மேலாண்மைக்கு முக்கியத்துவம் இல்லாதது தம்பதிகளின் வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அந்தவகையில், ஒரு சீரான நிதி வாழ்க்கைக்கு பின்பற்றக்கூடிய நிதித் திட்டமிடலின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
1/6
புதுமணத் தம்பதிகளுக்காக சில நிதியியல் ஆலோசனை..!! - Goodreturns Tamil
/photos/some-financial-advice-for-newlyweds-gr240.html
இருவரும் ஒன்றாக உட்கார்ந்து, தற்போதுள்ள EMIகள், வாடகை, வீட்டுச் செலவுகள், எரிபொருள், ஷாப்பிங், வெளியில் விருந்துக்குச் செல்லுதல், பொழுதுபோக்கு மற்றும் பெற்றோருக்கான பங்களிப்பு ஆகிய மாதாந்த மற்றும் ஆண்டு அடிப்படையிலான செலவுகளை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது செலவு வரம்புகளை அமைப்பதற்கும், செலவுகளை கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
2/6
புதுமணத் தம்பதிகளுக்காக சில நிதியியல் ஆலோசனை..!! - Goodreturns Tamil
/photos/some-financial-advice-for-newlyweds-gr240.html#photos-1
கணவன்-மனைவி இருவரும் பணிபுரிந்தால், கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்கவும், பொதுச் செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கவும் முடிவு செய்யலாம். ஆனால், பல தம்பதிகள் இதைச் செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் நீங்கள் சில முதலீடுகளைச் செய்திருக்கலாம். எனவே, திருமணத்திற்கு பிறகு, இவற்றின் ஒருங்கிணைப்பு அவசியம்.
3/6
புதுமணத் தம்பதிகளுக்காக சில நிதியியல் ஆலோசனை..!! - Goodreturns Tamil
/photos/some-financial-advice-for-newlyweds-gr240.html#photos-2
எதிர்காலத்தில் சொத்து வாங்குவது அல்லது கார் வாங்குவது, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஓய்வூதியம் போன்ற சில விஷயங்களை தம்பதிகள் ஒன்றாக அமர்ந்து விவாதிப்பது அவசியம். இதில் ஒரு சில இலக்குகள் பொதுவானதாகவும், வேறு சில தனிப்பட்டதாகவும் இருக்கலாம். ஒருவேளை, இருவரும் தனிப்பட்ட இலக்குகளை பகிர்ந்து கொள்வதால், உங்கள் கனவுகளில் அவர்களை ஈடுபடுத்துவது மட்டுமல்லாமல், அந்த இலக்கு உங்களுக்கு ஏன் முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதும் உதவியாக இருக்கும்.
4/6
புதுமணத் தம்பதிகளுக்காக சில நிதியியல் ஆலோசனை..!! - Goodreturns Tamil
/photos/some-financial-advice-for-newlyweds-gr240.html#photos-3
புதிதாக திருமணமானவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அதற்கு, 4 முதல் 6 மாத வருமானத்தை லிக்விடிட்டி முதலீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். இந்த நிதியை வழக்கமான செலவுகளுக்கு பயன்படுத்தாமல், அவசர மருத்துவச் செலவுகளுக்கும், இதர தேவைகளுக்கும் கண்டிப்பாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
5/6
புதுமணத் தம்பதிகளுக்காக சில நிதியியல் ஆலோசனை..!! - Goodreturns Tamil
/photos/some-financial-advice-for-newlyweds-gr240.html#photos-4
மனைவி பெயர் மாற்றம் செய்யப்பட்டால், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். பழைய ஆவணங்களில் பெற்றோர்கள் நாமினியாக இருக்கலாம். ஆனால், காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, வங்கிக் கணக்கு போன்ற முக்கிய ஆவணங்களில் மனைவி அல்லது கணவர் பெயரை நாமினேஷன் செய்து கொள்வது நல்லது.
6/6
புதுமணத் தம்பதிகளுக்காக சில நிதியியல் ஆலோசனை..!! - Goodreturns Tamil
/photos/some-financial-advice-for-newlyweds-gr240.html#photos-5
தம்பதியர் இருவரும், போதுமான அளவு ஆயுள், சுகாதாரம் மற்றும் சொத்து அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் வீட்டுக் காப்பீடு ஆகிய முக்கிய காப்புகள் அவசியமாகும்.