A Oneindia Venture
bredcrumb

வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முக்கியமான சில முதலீட்டு திட்டங்கள்..!!

By Sidhanathan K
| Published: Thursday, August 15, 2024, 15:40 [IST]
மாதாந்திர வருமானத்தை அதிகரிக்க சில முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இதன் மூலம் கணிசமான வரு மானத்தை பெற முடியும். அந்தவகையில், மாத வருமானம் தரும் சில முதலீட்டு திட்டங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முக்கியமான சில முதலீட்டு திட்டங்கள்..!!
1/5
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் (MIS):
இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு தனிநபர் தனிப்பட்ட கணக்கு அல்லது கூட்டு கணக்கை தொடங்கலாம். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டு கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டு வட்டியாக 7.4 சதவீதம் வழங்கப்படுகிறது. 

வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முக்கியமான சில முதலீட்டு திட்டங்கள்..!!
2/5

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS):

இந்தத் திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் காலாண்டு அடிப்படையில் வருமானத்தை பெறலாம். இதில் ஒரு முறை முதலீடு செய்து 5 ஆண்டுக்கு வருமானத்தை பெற முடியும். இதற்கு 5 ஆண்டுகள் லாக் இன் காலம் உண்டு. அதன் பின்பு வேண்டுமானால் 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். SCSS திட்டம் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முக்கியமான சில முதலீட்டு திட்டங்கள்..!!
3/5
அடல் பென்ஷன் யோஜனா (APY):
இந்த ஓய்வூதியத் திட்டம் கூட்டுறவு துறைகளில் இல்லாத தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட்டது. APY திட்டத்தின் கீழ், மாத ஓய்வூதியமாக ரூ.1,000, ரூ.2,000, ரூ.3000, ரூ.4000 அல்லது ரூ.5,000 வரை அவரவர் முதலீட்டை பொறுத்து வழங்கப்படும். வேறு வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். APY கணக்கை திறக்க, ஒரு நபர் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருக்க வேண்டும்.

வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முக்கியமான சில முதலீட்டு திட்டங்கள்..!!
4/5

Systematic Withdrawal Plan (SWP):

SWP என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முறையாக திரும்பப் பெற உதவும் திட்டம் ஆகும். இதற்காக, SIP முதலீட்டுத் திட்டம் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். ​​SWP மூலம், ஒவ்வொரு மாதமும் சில மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று மாதாந்திர வருமானத்தை பெறலாம்.

வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முக்கியமான சில முதலீட்டு திட்டங்கள்..!!
5/5
வருடாந்திர திட்டங்கள்:
பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஒரு முறை முதலீட்டிற்கு பிறகு, மாதாந்திர ஓய்வூதியத்தை தரும் வருடாந்திரத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றில் ஏதேனும் நமக்கு ஒத்துவருமா என்பதை பார்த்து அந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.