A Oneindia Venture
bredcrumb

வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் விதிக்கும் முக்கியமான சில கட்டணங்கள்..!!

By Sidhanathan K
| Published: Friday, August 9, 2024, 16:44 [IST]
புது வீடு வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது. வீட்டு லோன் வாங்காமல் நாம் விரும்பிய வீட்டை வாங்க முடியாது என்ற நிலை தற்பொழுது நிலவி வருகிறது. அவ்வாறு அனைவருக்கும் வீடு வாங்க உதவுவது தான் வீட்டுக் கடன் ஆகும். அந்தவகையில், வீடு வாங்க வங்கிக் கடன் பெருவதற்கு முன், அதற்கென செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் விதிக்கும் முக்கியமான சில கட்டணங்கள்..!!
1/5
வீட்டுக் கடனானது, செயலாக்கக் கட்டணம், நிர்வாக கட்டணங்கள், ஆவணங்கள், தாமதமாக பணம் செலுத்துவது, வட்டியில் மாற்றம், கடன் மறுசீரமைப்பு, வட்டி விகிதம், சட்ட கட்டணம், தொழில்நுட்ப ஆய்வு கட்டணம், வருடாந்திர சேவைக் கட்டணம் உட்பட பல வேலைகளை உள்ளடக்கியது. இதில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவை தவிர்க்க முடியாத கட்டணங்களாக பார்க்கப்படுகின்றன. மேலும், அரசு துறை வங்கிகளில் கடன் பெறுவதன் மூலம், குறைந்த வட்டியில் கடன் பெற வாய்ப்புள்ளது.
வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் விதிக்கும் முக்கியமான சில கட்டணங்கள்..!!
2/5
ஸ்டாம்ப் பேப்பர் செலவுகள்:
ஸ்டாம்ப் செலவுகள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது கட்டிடத்தின் தன்மைக்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது. இதை தீர்மானிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 

வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் விதிக்கும் முக்கியமான சில கட்டணங்கள்..!!
3/5
அதிக வட்டியிலிருந்து குறைந்த வட்டிக்கு செல்ல கட்டணம்:
கடன் வாங்கிய வங்கியை விட மற்ற வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன என்பதை அறிந்து சிலர் கடனை புதிய வங்கிக்கு மாற்றலாம். இதைத் தடுக்க, வங்கி வாடிக்கையாளர்களை அதிக கட்டணத்தில் இருந்து குறைந்த கட்டணத்திற்கு மாற்ற அனுமதிக்கிறது. இதற்கு முன்கூட்டியே கட்டணம் வசூலிக்கப்படும்.

வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் விதிக்கும் முக்கியமான சில கட்டணங்கள்..!!
4/5
பத்திர கட்டணம்:
வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, பல வகையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். இதற்கான பத்திரங்களைச் சரிபார்ப்பதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் வங்கிகள் தனிக் கட்டணம் வசூலிக்கும்.

வீட்டுக் கடன் வாங்கும்போது வங்கிகள் விதிக்கும் முக்கியமான சில கட்டணங்கள்..!!
5/5
மதிப்பீட்டு கட்டணம்:
நாம் வங்கிக்கடன் கேட்கும்போது, லோன் கோரும் சொத்தையும் கேட்ட தொகையையும் இதற்கென உள்ள அதிகாரிகளுடன் மதிப்பீடு செய்த பின்னரே வழங்குவர். இதற்கான மதிப்பீடு கட்டணம் லோன் கேட்கும் நம்மிடமிருந்து வசுலிக்கப்படும்.