A Oneindia Venture
bredcrumb

ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!

By Sidhanathan K
| Published: Tuesday, August 27, 2024, 19:07 [IST]
இன்சூரன்ஸ் வாங்கும் போது ஆன்லைனில் கிடைக்கக்கூடிய மலிவான, எளிதான மற்றும் வேகமான விருப்பத்திற்காக எந்தவித ஆலோசனையுமின்றி வாங்கிவிடுகிறோம். அப்படி ஆன்லைன் மூலம் ஒரு பாலிஸியில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!
1/7

ஆன்லைன் இன்சூரன்ஸ் பாலிஸிகள் பெரும்பாலும் பேக்கேஜூகளில் வருவதால் தனிநபர் விருப்பத்திற்கேற்ப இவற்றை மாற்ற முடியாது. அதேபோல, ஏதேனும் சிறப்பு தேவைகள் இருந்தால் அதனை இணைப்பதற்கு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இவற்றையெல்லாம் சரிபார்த்து வாங்குவது நல்லது.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!
2/7

பேக்கேஜ் சலுகைகளை நம்பி ஏமாறாமல் தேவையான இன்ஷூரன்ஸ் மட்டும் வாங்குவது நல்லது. பாலிசியை வாங்குவதற்கு முன், மனித வாழ்க்கை மதிப்பை (HLV) கணக்கிட்டு உங்கள் தேவையை மதிப்பிடுவது நல்லது. பாலிசியை வாங்கிய பிறகு, நீங்கள் சரியான கட்டணத்தை செலுத்தியுள்ளீர்கள் என்பதற்கு ஆதாரமாக உங்கள் பரிவர்த்தனையை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!
3/7

நீங்கள் ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிஸிகளை புதிதாக வாங்குபவராக இருந்தால், படிவங்களை நிரப்பும்போது அல்லது சரியான பாலிசியை தேர்ந்தெடுக்கும்போது சில தவறுகளை செய்யும் வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த முறையை பற்றி நன்கு அறிந்த, நம்பிக்கையுடையவர்களிடம் ஆலோசித்து நிரப்புவது நல்லது.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!
4/7

தேவையான தகவல்களை நிரப்பியவுடன், எவ்வளவு இன்சூரன்ஸ்களில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு சொல்லக்கூடிய ஆன்லைன் கால்குலேட்டர்கள் பல உள்ளன. இவற்றை உபயோகித்து உங்களுக்கு தேவைப்படக்கூடிய இன்சூரன்ஸ் அளவை அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!
5/7

அதேபோல், நீங்கள் ஆன்லைனில் பயன்படுத்தும் இணையதளத்தில் தவறான தகவல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனென்றால், காப்பீடுகளை ஒப்பிட்டு தேர்வுசெய்ய அனுமதிக்கும் இணையதளங்களில் காணப்படும் சில தகவல்கள் சில நேரங்களில் புதுப்பிக்கப்படாமல் கூட இருக்கலாம். எனவே, எந்தவொரு இணையதளத்தையும் பயன்படுத்துவதற்கு முன், அதன் பாதுகாப்புச் சான்றிதழை சரிபார்த்து, அது சட்டப்பூர்வமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!
6/7

இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு எந்தவொரு நிறுவனத்தையும் தேர்ந்தெடுப்பதற்கு முன், காப்பீட்டு உலகில் அந்நிறுவனத்தின் வரலாறு மற்றும் அந்நிறுவனத்தின் கிளெயிம் செட்டில்மெண்ட் போன்ற முக்கியமான தகவல்களை சரிபார்க்கவும். அதேபோல, அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மதிப்பீடுகளையும் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!!
7/7

ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிஸி வாங்கும் முன், இந்த சில யோசனைகளை கருத்தில் வைத்துக்கொண்டு வாங்குங்கள். இம்முறைகளை கையாள்வதில் குழப்பம் இருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாக செல்லலாம் அல்லது ஏஜென்ட் ஒருவரின் உதவியுடன் பின்பற்றலாம்.