By
Sidhanathan K
| Published: Monday, September 23, 2024, 13:23 [IST]
இந்தியாவின் முதல் பணக்காரர் மற்றும் உலகின் 12 வது பணக்காரருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது புதிய ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். அந்த தனியார் ஜெட் விமானத்தின் விலை மற்றும் சிறப்பு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
1/5
முகேஷ் அம்பானி ஆயிரம் கோடிக்கு புதிதாக வாங்கிய பிரைவேட் ஜெட்டில் இது தான் ஹைலைட்..!! - Goodreturns Tamil
/photos/this-is-highlight-of-mukesh-ambani-s-newly-bought-private-jet-for-a-thousand-crores-gr257.html
பொதுவாகவே, முகேஷ் அம்பானி விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கில்லாடி. அந்தவிதத்தில் தற்போது தனக்கென்று போயிங் 737 மேக்ஸ் 9 என்ற ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். இந்த ஜெட் விமானத்தின் விலை 118.5 மில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.987 கோடி என்று கூறப்படுகிறது.
2/5
முகேஷ் அம்பானி ஆயிரம் கோடிக்கு புதிதாக வாங்கிய பிரைவேட் ஜெட்டில் இது தான் ஹைலைட்..!! - Goodreturns Tamil
/photos/this-is-highlight-of-mukesh-ambani-s-newly-bought-private-jet-for-a-thousand-crores-gr257.html#photos-1
டைம்ஸ் நவ் அறிக்கையின்படி, இதற்கான ஒட்டுமொத்த செலவு ரூ.1,000 கோடியை தாண்டியதாகக் கூறப்படுகிறது. இந்த ஜெட் விமானம் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள், சௌகரியம், மற்ற விமானங்களுடன் ஒப்பிட முடியாத செயல்திறன் கொண்டது. அந்தவகையில், இரண்டு CFMI LEAP-1B இன்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ஜெட் ஆனது ஒரே பயணத்தில் 11,770 கி.மீ தூரத்தை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.
3/5
முகேஷ் அம்பானி ஆயிரம் கோடிக்கு புதிதாக வாங்கிய பிரைவேட் ஜெட்டில் இது தான் ஹைலைட்..!! - Goodreturns Tamil
/photos/this-is-highlight-of-mukesh-ambani-s-newly-bought-private-jet-for-a-thousand-crores-gr257.html#photos-2
இது ஒரு பெரிய மாஸ்டர் பெட்ரூம் உட்பட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாளிகையில் இருந்து கொண்டு பறப்பது போன்ற அனுபவத்தை தருவதாக கூறப்படுகிறது. அதன் வேகம், ஆடம்பரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் காரணமாக உலகளவில் சிறந்த தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றாக உள்ளது.
4/5
முகேஷ் அம்பானி ஆயிரம் கோடிக்கு புதிதாக வாங்கிய பிரைவேட் ஜெட்டில் இது தான் ஹைலைட்..!! - Goodreturns Tamil
/photos/this-is-highlight-of-mukesh-ambani-s-newly-bought-private-jet-for-a-thousand-crores-gr257.html#photos-3
முகேஷ் அம்பானி இதுபோல ஏற்கனவே ஒரு பாம்பார்டியர் குளோபல் 6000, இரண்டு டாசால்ட் ஃபால்கன் 900-கள் மற்றும் ஒரு எம்பிரேர் ERJ-135 உட்பட 9 ஜெட்களை வைத்திருக்கிறார். இந்தியா வருவதற்கு முன், முகேஷ் அம்பானியின் போயிங் 737 MAX 9, சுவிட்சர்லாந்தில் உள்ள யூரோ ஏர்போர்ட் பாசல்-மல்ஹவுஸ்-ஃப்ரீபர்க்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
5/5
முகேஷ் அம்பானி ஆயிரம் கோடிக்கு புதிதாக வாங்கிய பிரைவேட் ஜெட்டில் இது தான் ஹைலைட்..!! - Goodreturns Tamil
/photos/this-is-highlight-of-mukesh-ambani-s-newly-bought-private-jet-for-a-thousand-crores-gr257.html#photos-4
தற்போது, இந்த ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைமையகமான மும்பையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானம் நல்ல பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.