By
Sidhanathan K
| Published: Friday, May 31, 2024, 17:24 [IST]
வங்கிகளில் சேமிப்பு வைப்பு நிதியானது ஒவ்வொருவரின் சேமிப்பிலும் பாதுகாப்பு அடங்கிய முதலீட்டு அம்சமாகும். குறிப்பாக, வயதானவர்களுக்கு வங்கி வைப்பு நிதி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்தவகையில், வங்கி வைப்பு நிதி திட்டத்தால் கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1/5
வங்கி வைப்பு நிதியால் என்னென்ன பலன் உண்டு..? - Goodreturns Tamil
/photos/what-are-benefits-of-bank-fixed-deposits-gr189.html
குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதா மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை) வைப்பு நிதிக்கான வட்டி உங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். வைப்பு நிதியின் முதிர்வு காலத்தில் டெபாசிட் செய்திருந்தால், அசல் தொகை மீண்டும் அப்படியே கிடைக்கும்.
2/5
வங்கி வைப்பு நிதியால் என்னென்ன பலன் உண்டு..? - Goodreturns Tamil
/photos/what-are-benefits-of-bank-fixed-deposits-gr189.html#photos-1
இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஒவ்வொரு வங்கியை பொறுத்து, சுமார் 6 முதல் 8 சதவீதம் வரையில் வட்டி விகிதம் கிடைக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி கூடுதலாக கிடைக்கும்.
3/5
வங்கி வைப்பு நிதியால் என்னென்ன பலன் உண்டு..? - Goodreturns Tamil
/photos/what-are-benefits-of-bank-fixed-deposits-gr189.html#photos-2
பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக வங்கிகளில் கடன் பெறலாம். இதற்காக உங்கள் டெபாசிட்டில் இருந்து 75 சதவீதம் வரையில் கடனாக பெறலாம். சந்தை அபாயம் என்பது இல்லை. நிலையான வருமானம் தரும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
4/5
வங்கி வைப்பு நிதியால் என்னென்ன பலன் உண்டு..? - Goodreturns Tamil
/photos/what-are-benefits-of-bank-fixed-deposits-gr189.html#photos-3
டெபாசிட் கணக்கை தனிநபருக்காகவோ, இருவர் பெயரிலோ அல்லது இருவருக்கு மேற்பட்டோர் பெயரிலோ துவங்கலாம். அந்தவகையில், வாடிக்கையாளர் தேவைகளை கருத்தில் கொண்டு வங்கிகள் ஜாயின்ட் அக்கவுண்ட் வசதியை அளிக்கின்றன. ஜாயின்ட் கணக்கு என்றால், தொகையைத் திருப்பி பெறுவதற்கு இருவரும் சேர்ந்து கையெழுத்திட வேண்டும்.
5/5
வங்கி வைப்பு நிதியால் என்னென்ன பலன் உண்டு..? - Goodreturns Tamil
/photos/what-are-benefits-of-bank-fixed-deposits-gr189.html#photos-4
நிதிநிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளைவிட, வங்கிகளில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகள் பாதுகாப்பாக கருதப்படுகிறது.