A Oneindia Venture
bredcrumb

பங்குச்சந்தையில் அடிக்கடி உச்சரிக்கும் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் குறியீடுகளின் அர்த்தம் தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Friday, August 9, 2024, 16:41 [IST]

சர்வதேச சந்தையில் முதலீடுகளை செய்ய திட்டமிடுபவர்கள் NASDAQ மற்றும் டவ் ஜோன்ஸ் ஆகிய குறியீடுகளை பயன்படுத்துவர். அமெரிக்க நிதிச்சந்தையில் உள்ள சில முதன்மையான பங்குகளின் மதிப்புகளை கவனித்து, ஒட்டுமொத்த சந்தையின் நிலையை குறிப்பிட்டு சொல்லும் வேலையை தான் இந்த இரண்டு குறியீடுகளும் செய்து வருகின்றன. அந்தவகையில், NASDAQ மற்றும் டவ் ஜோன்ஸ் ஆகியவைகளை பற்றி இங்கு பார்போம்.

பங்குச்சந்தையில் அடிக்கடி உச்சரிக்கும் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் குறியீடுகளின் அர்த்தம் தெரியுமா..?
1/5

டவ் ஜோன்ஸ் (Dow Jones):

டவ் ஜோன்ஸ் தொழில் சராசரி (Dow Jones Industrial Average - DJIA) ஆனது உலகிலேயே மிகவும் பழமையான மற்றும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பங்குச் சந்தை குறியீடுகளில் ஒன்றாகும். இது 1896-ம் ஆண்டில் முதன்மையான 12 நிறுவனங்களின் பெயருடன் இந்த குறியீட்டைத் தொடங்கிய சார்லஸ் டவ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

பங்குச்சந்தையில் அடிக்கடி உச்சரிக்கும் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் குறியீடுகளின் அர்த்தம் தெரியுமா..?
2/5
டவ் ஜோன்ஸ் நிறுவனம் அமெரிக்க சந்தையில் முக்கியமான 30 நிறுவனங்களை கவனித்து வருகிறது. டவ் ஜோன்ஸ் தொழில் சராசரி குறியீடானது நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து வரும் நிறுவனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக்ககையில், டவ் ஜோன்ஸ் இருக்கும் நிலையை வைத்து நிதிச்சந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும். அதாவது டவ் ஜோன்ஸ் பிற சந்தை குறியீடுகளுக்கான டிரெண்ட்-ஐ அமைத்து தருகிறது.
பங்குச்சந்தையில் அடிக்கடி உச்சரிக்கும் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் குறியீடுகளின் அர்த்தம் தெரியுமா..?
3/5
டவ் ஜோன்ஸ் குறியீடு அதிகமாக இருந்தால், சந்தை ஏற்றமாக உள்ளது என்று பொதுவாக கருதப்படும். சந்தையில் முதன்மையாக உள்ள 30 நிறுவனங்களின் விலைகளை கூட்டி, டவ் டிவைஸர் என்று அழைக்கப்படும் எண்ணினால் வகுத்து வரும் எண் தான் டவ் குறியீடாக கணக்கிடப்படுகிறது. இதில் டவ் டிவைஸர் (Dow Divisor) என்பது பங்குகளின் விலையை தளமாகக் (Share Price weighting method) கொண்டதாகும்.
பங்குச்சந்தையில் அடிக்கடி உச்சரிக்கும் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் குறியீடுகளின் அர்த்தம் தெரியுமா..?
4/5

நாஸ்டாக் (NASDAQ):

NASDAQ என்பது நேஷனல் அசோசியேஷன் ஆஃப் செய்யூரிட்டீஸ் டீலர்ஸ் ஆட்டோமேட்டட் கொட்டேஷன் சிஸ்டம்ஸ் (National Association of Securities Dealers Automated Quotations System) என்பதன் சுருக்கமாகும். இதுதான் உலகின் முதல் கம்ப்யூட்டர்மயமான பங்கு வர்த்தக நிறுவனமாகும். இது டவ் ஜோன்ஸை விட பரவலான அளவில் தகவல்களை கொண்டிருப்பதால், பல்வேறு முதலீட்டாளர்களும், தொழில்முறை வல்லுநர்களும் இந்த குறியீடை பின்பற்றி வருகின்றனர்.

பங்குச்சந்தையில் அடிக்கடி உச்சரிக்கும் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் குறியீடுகளின் அர்த்தம் தெரியுமா..?
5/5
'NASDAQ Composite', என்று அடைக்கப்படும் நாஸ்டாக்-ஆனது நாஸ்டாக்-ல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை கவனித்து வருகிறது. சந்தைகளில் மூலதனங்களை அடிப்படையாக வைக்கும் முறையில் (Weighted Market Capitalization Method) நாஸ்டாக் கணக்கிடப்படுகிறது. இந்த குறியீட்டில் ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.