A Oneindia Venture
bredcrumb

நிதி பரிவர்த்தனைகளில் எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸின் தேவை என்ன..?

By Sidhanathan K
| Published: Monday, September 23, 2024, 13:33 [IST]

எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (இசிஎஸ்) என்பது எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகமான அளவில் இருக்கும் கட்டணங்களை மிக எளிதாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும், வாடிக்கையாளர்கள் செலுத்தும் அதிகமான கட்டணங்களை மிக எளிதாக வசூலிக்கவும் வங்கிகள் பயன்படுத்தும் புதிய நவீன தொழில்நுட்ப வசதியாகும்.

நிதி பரிவர்த்தனைகளில் எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸின் தேவை என்ன..?
1/5
எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (இசிஎஸ்) ஆனது இசிஎஸ் கிரெடிட் மற்றும் இசிஎஸ் டெபிட் என இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
நிதி பரிவர்த்தனைகளில் எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸின் தேவை என்ன..?
2/5
1. இசிஎஸ் கிரெடிட்
தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் மற்றும் தங்கள் முதலீட்டாளர்களுக்கு பணத்தைச் செலுத்தவும் இசிஎஸ் கிரெடிட் என்ற வசதியை வங்கிகள் பயன்படுத்துகின்றன. மேலும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டிவிடெண்ட் தொகை, வட்டித் தொகை, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பெரிய தொகைகளை உரிய நேரத்தில் வழங்க இந்த எசிஎஸ் கிரெடிட் வசதியை பயன்படுத்துகின்றன.

நிதி பரிவர்த்தனைகளில் எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸின் தேவை என்ன..?
3/5

2. இசிஎஸ் டெபிட்

இசிஎஸ் டெபிட் என்பது வாடிக்கையாளர்களிடமிருந்து மிகப் பெரிய அளவில் கட்டணங்களை வசூலிப்பதற்கு பயன்படுத்தப்படும் முறையாகும். குறிப்பாக யூட்டிலிட்டி சர்வீசஸ், கடனாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்பவர்கள் ஆகியோர் செலுத்தும் பெரிய அளவிலான தொகைகளை இசிஎஸ் டெபிட் மூலம் வங்கிகள் வசூல் செய்கின்றன. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து இசிஎஸ் டெபிட் மூலம் தொலைபேசி, மின்சாரம், மற்றும் தண்ணீர் கட்டணங்கள், செஸ் அல்லது வரி, கடன் தவணை மற்றும் பரஸ்பர நிதிக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் இன்சூரன்ஸ் பிரீமீயத் தொகை ஆகியவற்றை வங்கிகள் வசூல் செய்கின்றன.

நிதி பரிவர்த்தனைகளில் எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸின் தேவை என்ன..?
4/5
இசிஎஸ் மூலம் இந்தியாவில் உள்ள என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். எனினும் இவற்றை ஃபாரின் எக்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட் 2000 (எஃப்இஎம்எ) மற்றும் வயர் ட்ரான்ஸ்பர் கைடுலைன்ஸ் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படியே செய்ய முடியும். இசிஎஸ் வசதியை பயன்படுத்தும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்த அவர்களுக்கு உரிய நேரத்தில் நினைவூட்டல் செய்ய வேண்டும்.
நிதி பரிவர்த்தனைகளில் எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸின் தேவை என்ன..?
5/5
இசிஎஸ் வசதியை பயன்படுத்துவதற்கான கட்டணங்களை தீர்மானிக்க வங்கிகளின் முடிவுக்கு ரிசர்வ் வங்கி விட்டுவிட்டது. எனவே இந்த ECS வசதி மூலம் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தால், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப் போகிறது என்பதை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.