A Oneindia Venture
bredcrumb

மருத்துவ காப்பீட்டுக்கு முன் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்..?

By Sidhanathan K
| Published: Thursday, September 12, 2024, 18:47 [IST]
எதிர்பாராத திடீர் உடல்நலக் கோளாறுகளால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதுபோன்ற சமயங்களில் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நமக்கு உதவியாக இருக்கும். மருத்துவ காப்பீடு இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறலாம். எனவே, அனைவரும் கண்டிப்பாக மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுக்கு முன் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்..?
1/5
காப்பீடு என்றாலே நிறைய விதிமுறைகள் உண்டு. அதிலும் மருத்துவ காப்பீடு என்றால் நிறைய வழிமுறைகள் உள்ளன. அந்தவகையில், மருத்துவ காப்பீடுக்கு மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம். பொதுவாக விண்ணப்பதாரர் 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பின், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதில்லை.
மருத்துவ காப்பீட்டுக்கு முன் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்..?
2/5
எனினும் சில காப்பீடு நிறுவனங்கள் 50 வயது மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. ஆனாலும், சில மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் 60 முதல் 69 வயதுக்குட்பட்ட மூத்த குடி மக்களுக்கு மருத்துவ பரிசோதனையில் விலக்கு அளிக்கிறது.
மருத்துவ காப்பீட்டுக்கு முன் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்..?
3/5
ஒவ்வொரு காப்பீடு நிறுவனங்களுக்கும் வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. அந்தவகையில், 46 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்னென்ன மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
1.இரத்த அணுக்கள் எண்ணிக்கை
2.இரத்தத்தில் சர்க்கரை அளவு
3.இஎஸ்அர்(ESR)
4.சிகப்பணுக்கள் விகிதம்
5.எஸ்ஜிபிடி(SGPT)
6.சிறுநீர் பரிசோதனை
7.இசிஜி(ECG)
8.இரத்த கொதிப்பு அளவு
மருத்துவ காப்பீட்டுக்கு முன் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்..?
4/5

காப்பீட்டாளர் முன்னரே ஏதும் நோய் அல்லது காயம் மூலமாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ 24 அல்லது 48 மாதங்களுக்கு முன்னர் இருந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்திருந்தாலோ அதைப் பற்றி முதல் காப்பீட்டு கட்டணம் செலுத்தும் முன்னரே காப்பீடு நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுவும் காப்பீடுநிறுவனங்களுக்கு இடையே மாறுபடும்.

மருத்துவ காப்பீட்டுக்கு முன் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்..?
5/5
பொதுவாக, மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை கவனமாக அதன் சொற்றொடரில் சொல்லப்பட்டிருக்கும் நேர் மற்றும் மறைமுக விபரங்களை நன்கு படித்துவிட்டு வாங்குவது நல்லது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+