A Oneindia Venture
bredcrumb

இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது..?

By Sidhanathan K
| Published: Friday, June 21, 2024, 16:44 [IST]

காப்பீடு பாலிசி என்பது அத்வாசியமான ஒன்று. நமக்கு உதவக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த காப்பீடு பாலிசி விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். காப்பீடு பாலிசிக்கான காலம் முடிந்த பிறகு, மீண்டும் பிரீமியம் செலுத்தாவிட்டால் காப்பீடு பாலிசியானது காலாவதியாகிவிடும். அப்படி காலாவதியான பாலிசியின் பாலிசிதாரர் இறந்த பிறகு, அந்த பாலிசியின் வாரிசுதாரருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் எதுவும் கிடைக்காது.

insurance policy
1/6

நமது வருங்கால சந்ததிகளுக்காக டெர்ம் பாலிசி திட்டம் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன்மூலம் குறைந்த வருடாந்திர பிரீமியம் விகிதத்துடன், சீரான அடிப்படை உடல்நல பரிசோதனைகள் மூலம் ஒரு நல்ல காப்பீட்டு திட்டத்தை பெற முடியும்.

insurance policy
2/6
காப்பீடு பாலிசி வாங்கியபிறகு, காப்பீடு காலம் முடிவடையும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு பிரீமியத்தை செலுத்த வேண்டும். அந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட கருணை காலத்திற்குள் பிரீமியத்தை செலுத்த முடியாவிட்டால் அந்த காப்பீடு திட்டம் காலவதியாகிவிடும். காலாவதியான காப்பீடு திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வழி எதுவும் இல்லை.
insurance policy
3/6
ஒரு புதிய காப்பீடு திட்டத்தை வாங்குவது மட்டும் தான் மாற்று வழி. இதற்கான செலவு கட்டாயம் அதிகமாக இருக்கும். எனவே, ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்த தவறவிட்டால் என்ன செய்யலாம் என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
insurance policy
4/6
காப்பீட்டு பிரீமியத்தை செலுத்த தவறிவிட்டால் பாலிசியானது கருணை கால நிலைக்கு மாற்றப்படும். இந்த கருணை காலத்தில் காப்பீட்டு நிறுவனம், காப்பீட்டாளரின் இறப்பிற்கு ஒரு சரியான கூற்று தாக்கல் செய்யப்பட்டால், கண்டிப்பாக காப்பீடு தொகை அளிக்க வேண்டும். அதே நபர் கருணை காலம் முடிந்த பின் இறந்து விடுகின்றார் எனில், பயனாளர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்காது.
insurance policy
5/6

இப்படியான சூழலில், பல காப்பீடு நிறுவனங்கள் காலாவதியான காப்பீடு திட்டங்களுக்கு உயிர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. இந்தச் செயல்முறை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். மேலும் இதற்கு மற்றொரு மருத்துவ சோதனை அல்லது பெனால்டி தொகை தேவைப்படலாம்.

insurance policy
6/6

காலவதியான பாலிசி திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் செயல்முறையானது பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே வேறுபட்டிருக்கலாம். இந்த நடைமுறையானது மீள்பரிசீலனை செய்யப்பட்ட நேரம், பாலிசி வகை மற்றும் காப்புறுதி செலவு ஆகியவற்றை சார்ந்து இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+