A Oneindia Venture
bredcrumb

காப்பீடு தொடர்பான புகார்களை தெரிவிக்க என்ன செய்வது..?

By Sidhanathan K
| Published: Monday, September 9, 2024, 20:13 [IST]

நீங்கள் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு அல்லது மோட்டார் காப்பீட்டு மற்றும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டகளில் திருப்தி இல்லையா..? அவற்றை பற்றி புகார் தெரிவிக்க என்ன செய்யலாம் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

காப்பீடு தொடர்பான புகார்களை தெரிவிக்க என்ன செய்வது..?
1/5

இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அன்ட் டிவெலப்மென்ட் அத்தாரிட்டி (ஐஆர்டிஏஐ) மூலம் காப்பீடு குறித்து புகார்களை தாக்கல் செய்ய முடியும். பாலிசிதாரர்களின் புகார்களை பெறுவதற்கென ஐஆர்டிஏஐ ஒரு தனி செல்லை ஏற்படுத்தியுள்ளது. ஐஆர்டிஏஐ-ன் இந்த தனி செல், ஆயுள் காப்பீடு மற்றும் இதர காப்பீட்டு திட்டங்களில் இருக்கும் புகார்களை தனித்தனியாக கையாளுகிறது.

காப்பீடு தொடர்பான புகார்களை தெரிவிக்க என்ன செய்வது..?
2/5

ஐஆர்டிஏஐ-வில் புகார்களை தெரிவிப்பதற்கு முன்பாக பாலிசிதாரர்கள், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் தங்களின் புகார்களை தெரிவித்திருக்க வேண்டும். தெரிவித்த புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பதில் அளிக்காமல் இருந்தாலோ அல்லது அவர்கள் கொடுத்த பதில் உங்களுக்கு திருப்தி அளிக்காமல் இருந்தாலோ ஐஆர்டிஏஐ-ல் உள்ள புகார் செல்லுக்கு புகார்களை அனுப்பலாம்.

காப்பீடு தொடர்பான புகார்களை தெரிவிக்க என்ன செய்வது..?
3/5
புகார்களை, ஐஆர்டிஏஐ-ன் ஆயுள் காப்பீட்டு பாலிசி அல்லாத புகார் செல்லுக்கு அனுப்ப வேண்டும். பாலிசிதாரரின் அப்படியான புகார்கள் மீது ஐஆர்டிஏஐ புகார் செல் விரைந்து நடவடிக்கை எடுக்கும். அதேபோல, பாலிசி காலம் அல்லது பாலிசி தொகை சம்பந்தமான சட்ட ரீதியான புகார்களை ஐஆர்டிஏஐ எடுத்துக் கொள்ளாது. அதற்கு சட்டரீதியிலான அமைப்புகளான இன்சூரன்ஸ் ஒம்புட்ஸ்மென், கன்ஸ்யூமர் ஃபோரா அல்லது சிவில் நீதிமன்றங்களை அணுக வேண்டும்.
காப்பீடு தொடர்பான புகார்களை தெரிவிக்க என்ன செய்வது..?
4/5

மேலும், பாலிசிதாரர் அளிக்கும் புகார்களை மட்டுமே ஐஆர்டிஏஐ எடுத்துக் கொள்ளும். பாலிசிதாரர் சார்பாக அவர்களுடைய வழக்குரைஞர்களோ அல்லது முகவர்களோ அல்லது மூன்றாவது நபர்களோ அளிக்கும் புகார்களை ஐஆர்டிஏஐ எடுத்துக் கொள்ளாது. இமெயில் மூலமாக ஐஆர்டிஏஐ-ற்கு புகார் அனுப்பும் போது, உங்கள் குறைகளை மிகத் தெளிவாக புகார் பதிவு படிவத்தில் எழுதி அனுப்பு வேண்டும்.

காப்பீடு தொடர்பான புகார்களை தெரிவிக்க என்ன செய்வது..?
5/5
ஐஆர்டிஏஐ போர்ட்டல் புகார்களை பதிவு செய்யவும் மற்றும் புகார்களின் நிலையை கண்காணிக்கவும் பிமா பரோசா அமைப்பை பயன்படுத்தி கொள்ளலாம் - https://bimabharosa.irdai.gov.in/. மேலும், [email protected] மூலம் மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம்.