A Oneindia Venture
bredcrumb

யாருக்கெல்லாம் TAN எண் அவசியம்..? புதிதாக TAN எண் விண்ணப்பிப்பது எப்படி..?

By Sidhanathan K
| Published: Tuesday, August 27, 2024, 19:29 [IST]

டான் (TAN) எண் என்று அழைக்கப்படும் 10 இலக்க எண் ஆனது வரி பிடித்தம் மற்றும் வரி வசூல் சேவைகளை வழங்கவும், வருமான வரி சார்ந்த பணிகளை செய்யவும் பயன்படுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பணப்பரிமாற்றம் செய்யும்போது வரி பிடித்தம் செய்யவும், அதனை வருமான வரித்துறைக்கு செலுத்தவும் தேவைப்படும் எண் ஆகும். இதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் TAN எண் அவசியம்..? புதிதாக TAN எண் விண்ணப்பிப்பது எப்படி..?
1/6

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 203A இன் படி, வரி வசூல் அல்லது வருமான வரி பிடித்தம் உட்பட பொது மக்களுக்கு சேவைகளை வழங்கும் அனைத்து அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் வருமான வரித் துறையிடமிருந்து டான் (TAN) எண்ணை விண்ணப்பித்து பெற வேண்டும்.

யாருக்கெல்லாம் TAN எண் அவசியம்..? புதிதாக TAN எண் விண்ணப்பிப்பது எப்படி..?
2/6

அதாவது, ஒரு நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்திலிருந்து வரியை கழித்த பிறகு சம்பளத்தை பணியாளருக்கு வழங்கும். கழிக்கப்பட்ட வரியை வருமான வரித்துறைக்கு கட்டும்போது, நிறுவனத்தின் TAN எண் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அந்தவகையில், கழிக்கப்பட்ட வரி தொடர்பான டிடிஎஸ் (TDS) அறிக்கையில் டான் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

யாருக்கெல்லாம் TAN எண் அவசியம்..? புதிதாக TAN எண் விண்ணப்பிப்பது எப்படி..?
3/6

மேலும், வருமான வரி மூலக்கழித்தல் / வருமான வரி வசூல் விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் கட்டணப்படிவங்கள் போன்றவற்றிலும் டான் எண் குறிக்கப்பட வேண்டும். TDS/TCS படிவங்களில் டான் எண் சேர்க்கப்படாவிட்டால், அப்படிவங்கள் வருமான வரித்துறையினரால் பரிசீலீக்கப்படாது. அதோடு, குறிப்பிட்ட அலுவலக அதிகாரிகள் அல்லது அலுவலகங்களையும் சென்று சேராது. அதேபோல், வங்கிகளும் டான் எண் சேர்க்கப்படாத TDS/TCS படிவங்களை ஏற்காது.

யாருக்கெல்லாம் TAN எண் அவசியம்..? புதிதாக TAN எண் விண்ணப்பிப்பது எப்படி..?
4/6

தனிநபர், தனிநபர் தொழில் நிறுவன கிளைகள், தனி நபர் சங்கம் (AOPs)/ தனிநபர்களின் கூட்டமைப்பு (BOIs)/ நீதி நிறுவனம் அல்லது கிளை, செயற்கை நீதி துறை நபர், தன்னாட்சி / சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் உட்பட்டோர் டான் எண்ணை பெற வேண்டும்.

யாருக்கெல்லாம் TAN எண் அவசியம்..? புதிதாக TAN எண் விண்ணப்பிப்பது எப்படி..?
5/6

மேலே குறிப்பிட்டுள்ள சேவைகள் அல்லது பணியை வழங்கக்கூடிய தனிநபர்கள், அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் TAN எண்ணை பெறாவிட்டால் அல்லது தேவையான சான்றிதழ்களில் TAN எண்ணை குறிப்பிடத் தவறினால் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம்.

யாருக்கெல்லாம் TAN எண் அவசியம்..? புதிதாக TAN எண் விண்ணப்பிப்பது எப்படி..?
6/6

டான் எண் பெற விரும்புபவர்கள், 49B என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து TIN மையங்களிலோ அல்லது http://tin.nsdl.com அல்லது www.incometaxindia.gov.in என்ற இணைய தளங்கள் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https://incometaxindia.gov.in/Pages/tan-tds.aspx இந்த இணையதள பக்கத்தை பார்வையிடவும்.