By
Sidhanathan K
| Published: Wednesday, August 7, 2024, 18:17 [IST]
இந்தியாவில் தங்க நகைகள் 22 காரட் தங்கத்தால் செய்யப்படுகின்றன. ஆனால், மற்ற நாடுகளில் இது 14 அல்லது 18 காரட் தங்கத்தால் செய்யப்படுகிறது. அந்தவகையில், தங்க நகைகளை வாங்கும் போது கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
1/5
தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/why-purity-of-gold-should-be-tested-how-check-purity-gold-india-gr230.html
பொதுவாக, நகைக்கடைக்காரர்கள் 22 காரட் தங்க நகைகளுக்கு கல்லின் எடையையும் நகையின் எடையோடு சேர்த்து விடுவர். அதனால் வாடிக்கையாளர்களாகிய நமக்கு தான் நஷ்டம். இதுபோன்ற கல் பதித்த நகைகளை வாங்கும்போது நகை மற்றும் கல் ஆகிய இரண்டிற்கும் எடை தனித்தனியாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
2/5
தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/why-purity-of-gold-should-be-tested-how-check-purity-gold-india-gr230.html#photos-1
தரக்குறியிடும் நிறுவனம் (ஹால் மார்க்) தான் இந்திய தரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் (BIS) கீழ், நகைக்கடைகளில் விற்கப்படும் தங்கத்தின் தரத்தை இந்திய நியமத்திற்கு ஏற்ப சான்றளிக்கும். இதை தான் BIS முத்திரை பதித்த நகை என்கிறோம்.
3/5
தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/why-purity-of-gold-should-be-tested-how-check-purity-gold-india-gr230.html#photos-2
இவ்வாறு, தரக்கட்டுப்பாட்டு விதிகளின் மூலம் சான்றளிக்கப்பட்ட நகைகளுக்கு BIS அடையாளக் குறி கொடுக்கப்படும். KDM நகைகள் தர மதிப்பீடு செய்யப்பட்டவை இல்லை. எனவே, KDM நகைகள் யாவும் தூய்மையானவை அல்ல.
4/5
தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/why-purity-of-gold-should-be-tested-how-check-purity-gold-india-gr230.html#photos-3
தங்கத்தின் தூய்மை, 8 காரட் தங்கம் 333 என தொடங்கி, 24 காரட் தங்கம் 999 என்பது வரை சில எண் குறியீடு மூலம் குறிப்பிடப்படும். மேலும், அந்த குறியீட்டில் இருக்கும் எழுத்துக்கள் தரக்குறியீடு செய்த ஆண்டை குறிக்கும். இவை தரக்கட்டுப்பாட்டு சட்டத்தால் முடிவு செய்யப்பட்டவை ஆகும்.
5/5
தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் தெரியுமா..? - Goodreturns Tamil
/photos/why-purity-of-gold-should-be-tested-how-check-purity-gold-india-gr230.html#photos-4
பல வருடங்களுக்குப் பிறகு தங்கத்தை விற்கும்போது அல்லது அடகு வைக்கும்போது, அதற்கு நல்ல மதிப்பு கிடைக்காது. இதற்கு தங்கம் தரப்படுத்தப்படாததே காரணம் ஆகும். நாம் பணம் செலுத்தி வாங்கிய தங்கம் தூய்மையானதா என்பதைச் சரிபார்க்கத் தவறிவிடுகிறோம். எனவே, தங்கத்தின் தூய்மையை சோதிப்பது அத்தியாவசியமாகிறது.