வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புகள் மத்தியில், எதையும் பொருட்படுத்தாமல் ஒபாமா நிர்வாகம் பாகிஸ்தான் நாட்டிற்கு 8 எப்-16 ரகப் போர் ஜெட் விமானங்களை அளிக்க ஒப்புக்கொண்டது.
இதற்கு இந்திய அரசும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி ஊடகங்களில் சூடு தனியும் முன்னரே ஒபாமா பாகிஸ்தான் விமானப் படையைக் கூடுதல் வலிமைப்படுத்தும் விதிமாக AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமான அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்கா.
ஒபாமா அரசு
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இந்திய அரசு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததும் ஒபாமா அரசு சற்றும் காதில் வாங்காமல் பாகிஸ்தான் விமானப் படையை வலிமைப்படுத்தும் விதமாக (தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக) அதிநவீன எட்டு எப்-16 ரகப் போர் ஜெட் விமானங்களை அளிக்க ஒப்புக் கொண்டது.
வைப்பர் தாக்குதல்
இந்நிலையில் தற்போது வெளிநாடுகளுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் 170 மில்லியன் டாலர் மதிப்பிலான 9 AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
பென்டகன்
பெல் ஹெலிகாப்டர் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்களைத் தயாரித்துப் பாகிஸ்தான் நாட்டிற்கு டெலிவரி செய்யும் திட்டத்தை வெளிநாடுகளும் ஆயுத விற்பனை திட்டத்தின் கீழ் ஒப்பந்த வடிவில் பென்டகன் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை
இதுகுறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் நாட்டிற்கு டெலிவரி செய்ய உள்ள AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்களைப் போர்ட் வொர்த் மற்றும் அமரிலோ தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எனவும், இதன் பணிகள் வருகிற செப்டம்பர் 2018ஆம் வருடம் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6.. 950 மில்லியன் டாலர் டீல்..
இந்த 9 AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்கள் கொள்முதல் 950 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 9 auxiliary fuel kitகளும் பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க அளிக்க உள்ளது.
பாகிஸ்தான்
அமெரிக்க அளித்துள்ளது 950 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் என்றால், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கோரிய ஆயுதங்கள் பட்டியல் மிகவும் அதிகம்.
சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க அமெரிக்காவிடம் கொள்முதல் பட்டியலை அளித்துள்ளது பாகிஸ்தான்.
ஆயுத கொள்முதல்
தற்போது அமெரிக்க அளிக்கும் ஆயுதம் மற்றும் போர் விமானங்கள் மூலம் தெற்கு ஆசிய பகுதியில் ஏற்படும் போர் சூழலை எளிதாகப் பாகிஸ்தான் நாட்டால் எதிர்கொள்ள முடியும் என Defence Security Cooperation Agency தெரிவித்துள்ளது.
இந்தியா
இதனால் இந்தியாவிற்குப் பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கைகள் எழுந்துள்ளது. இதனை எதிர்கொள்ள இந்திய அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டு வருகிறது.
வளைகுடா நாடுகள்
ரிலையன்ஸ் ஜியோ
அதானி குழுமம்
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications