பெய்ஜிங்: கடந்த சில வருடங்களாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா பொருளாதாரச் சரிவிலும், வர்த்தகச் சரிவிலும் சிக்கித்தவித்து வருகிறது.
தற்போது இந்நாட்டின் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என நோக்கத்துடன் சீனா அடுத்த 2 அல்லது 3 வருடத்தில் சுமார் 60 லட்சம் பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
கடந்த 20 வருடத்தில் 60 லட்சம் பேர் என்ற மிகப்பெரிய ஆட்குறைப்புத் திட்டத்தைச் சீனா கையில் எடுத்துள்ளது.
சீனா
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுடன், பொருளாதாரத்தில் சரிசமமாகப் போட்டி போட்ட சீனா உள்கட்டமைப்பில் மோசான நிலையை அடைந்ததால் அடுத்தடுத்த பிரச்சனைகளைச் சந்தித்து மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது.
இதன் தொடர்ச்சியாக வர்த்தகச் சரிவிற்கும் வித்திட்டுள்ளது சீனா. இதற்கு ஆதாரமாகக் கடந்த சில காலாண்டுகளாக இந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து சரிந்து சர்வதேச சந்தைகளை அதிரவைத்துள்ளது.
150 பில்லியன் யுவான்
சீன அரசு இந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரக் கடுமையாகப் போராடி வரும் இவ்வேளையில், சீனாவின் நிலக்கரி மற்றும் ஸ்டீல் துறையின் வர்த்தகத்தை மீட்டு எடுக்கவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இருந்து இத்துறையாகக் காக்கவும் அடுத்த 3 வருடத்தில் 150 பில்லியன் யுவான் அதாவது 23 பில்லியன் அமெரிக்க டாலரைச் செலவிட உள்ளது.
பிற துறைகள்
இதேபோல் பிற துறைகளையும் காக்க நிதியுதவி அளிப்பது குறித்துச் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதிகக் கடனில் மிதக்கும் நிறுவனங்களை மீட்பது மிகவும் கடினம் என, சீன அரசின் 60 லட்சம் பேர் ஆட்குறைப்புத் திட்டம் குறித்து நன்கு அறிந்த இந்நாட்டு அரசின் 2 உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்கள்
அதிகக் கடன் மற்றும் வர்த்தகச் சரிவில் தவிக்கும் நிறுவனங்களின் சில செயல்பாடுகளை முழுமையாகவோ அல்லது தற்காலிகமாகவோ முடக்கினால் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இதனால் நாட்டின் வேலையின்மை, வேலை இழப்பு மற்றும் திவாலாகும் நிறுவனங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
சீன அரசு
2016ஆம் ஆண்டில் சீன அரசு குறைந்த வர்த்தகம் மற்றும் அதிகக் கடனில் மிதக்கும் நிறுவனங்களை உடனடியாக மூடுவது மிக முக்கியப் பணிகளில் ஒன்றாகவும், முதன்மையாகவும் வைத்துச் செயல்படத் திட்டமிட்டுள்ளார் சீன நாட்டுத் தலைவர் Li Keqiang.
ஆட்குறைப்பு
அதுமட்டும் அல்லாமல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 50 லட்சம் முதல் 60 லட்சம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளது சீனா அரசு.
7 துறைகள்
சீனா நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை நிலைப்படுத்த நிறுவனங்களை மூடுதல் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் சுமார் 7 முக்கியத் துறைகளில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அவை சிமெண்ட், கண்ணாடி உற்பத்தி, கப்பல் கட்டுமானம், சோலார் பவர் ஆகியவை ஆகும்.
உற்பத்தி இலக்குகள்
இந்நாட்டு அரசு முக்கிய ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளதால், பல துறைகளில் உற்பத்தி இலக்கை அதிகளவில் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications