முதலீடு செய்ய இந்தியா தான் பெஸ்ட்.. 1,300 சீஇஓ-க்களின் ஒருமித்த கருத்து..!

டெல்லி: சர்வதேச நாடுகளில் வர்த்தக வாய்ப்புகள், வளர்ச்சி, முதலீட்டுக்கான பலன் அதிகம் கிடைக்கும் சந்தைகள், லாப வாய்ப்புகள் எனப் பல்வேறு காரணிகளில் கேபிஎம்ஜி நிறுவனம் 2016ஆம் ஆண்டுக்கான குளோபல் சீஇஓ அவுட்லுக் என்ற தலைப்பில் உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் மிகப்பெரிய ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில் சீனா, அமெரிக்கா, மற்றும் இதர வல்லரசு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா!

இந்தியா முதல் இடம்..

இந்தியா முதல் இடம்..

வர்த்தக வாய்ப்புகள், வளர்ச்சி, முதலீட்டுக்கான பலன் அதிகம் கிடைக்கும் சந்தைகள், லாப வாய்ப்புகள் எனப் பல்வேறு கோணங்களில் KPMG நிறுவனம் செய்த ஆய்வில் இந்தியா 38 சதவீத சாதகமான வாய்ப்புகளைக் கொண்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சீனாவும்.. அமெரிக்காவும்..

சீனாவும்.. அமெரிக்காவும்..

இந்தியாவைத் தொடர்ந்து டாப் 5 நாடுகள் பட்டியலில் சீனா 34%, அமெரிக்கா 33%, ஆஸ்திரேலியா 25%, மேற்கு ஐரோப்பா 25% என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

ரஷ்யா எங்கே..

ரஷ்யா எங்கே..

உலக நாடுகளில் அதிகம் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்த பின்னடைவைச் சந்தித்து வருவதாலும், வர்த்தக வாய்ப்புகள் இழந்து வருவதாலும், இப்பட்டியலில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் 21 சதவீதமும், ரஷ்யா 21 சதவீதமும் பெற்றுப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 ஜப்பான்

ஜப்பான்

மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே சர்வதேச சந்தை சூழ்நிலையால் ஜப்பான் மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்து வருகிறது. அடுத்த 3 வருடத்திற்கு ஜப்பான் கடுமையான நிதி மற்றும் வர்த்தக நெருக்கடியைச் சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கிறது.

இந்தியா முதல் இடத்தைப் பிடிக்க என்ன காரணம்..?

 

இந்தியா

இந்தியா

ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தையால் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்தியாவில் இளைஞர்கள் மக்கள் தொகை மிகவும் அதிகம், இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், ஜிடிபி-யில் தொடர் உயர்வு, டிஜிட்டல் கட்டுமானத்தில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

இதுவே சர்வதேச சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கிறது. 2015ஆம் ஆண்டு ஆய்வில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன டிஜிட்டல்..

 

அப்படி என்ன டிஜிட்டல்..

அப்படி என்ன டிஜிட்டல்..

தற்போது இந்தியாவிடம் 100 மக்களின் பயோமெட்ரிக், அதாவது, கை மற்றும் விரல் ரேகை, கண் கருவிழி ரேகைகள் அடங்கிய டோட்டாபேஸ் வைத்துள்ளது. இதனால் உலகிலேயே அதிகப் பயோமெட்ரிக் டேட்டா வைத்துள்ள நாடுகளில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

உலகிலேயே அதிக ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமாக இந்திய ரயில்வே துறை உள்ளது. அதுமட்டும் அல்லாமல் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாகவும் திகழ்கிறது.

இந்நிலையில் இந்திய ரயில்வே நிறுவனம் 70 சதவீத டிக்கெட் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உலக ஈகாமர்ஸ் நிறுவனங்களில் முக்கிய இடத்தை இந்திய ரயில்வே இடம் பெற்றுள்ளது. இதுவே இந்தியாவில் நடைபெற்றும் வரும் டிஜிட்டல் புரட்சி.

 

நம்பிக்கை

நம்பிக்கை

மேலும் அடுத்த 3 வருடத்தில் தங்களது நிறுவனம் சந்தைக்கு ஏற்றவாறு முழுமையாக மாறப்போகிறது என்று 41 சதவீத சீஇஓக்கள் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு ஆய்வில் இதன் அளவு 29 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+