வசமாக சிக்கிய எலான் மஸ்க்: ஈரான் போரில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஸ்டார்லிங்க்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வராமல் தொடர்கதையாகவே நீடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நிறுவனமான ஸ்டார்லிங்கின் தொழில்நுட்பத்தையே ஈரான் பயன்படுத்தி இருக்கும் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஈரான் பயன்படுத்தியதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

வசமாக சிக்கிய எலான் மஸ்க்: ஈரான் போரில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஸ்டார்லிங்க்..!!

அமெரிக்க படைகள் ஈரானின் பாரம்பரிய தகவல் தொடர்பு அமைப்புகளை சிதைப்பதில் கவனம் செலுத்தியபோது, கட்டளை மற்றும் கட்டுப்பாடு ,டிரோன்களை கண்காணிப்பதற்காக ஈரான் ஸ்டார்லிங்க் சேவையை மாற்று தொடர்பு வழியாக பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க வீரர்களை பலி வாங்கிய சில ஈரான் தாக்குதல்களூக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத்திடம் வழங்கப்பட்ட ரகசிய போர் ஆய்வறிக்கையில், கட்டளை கட்டுப்பாடு மற்றும் டிரோன் நடவடிக்கைகளுக்கு ஈரான் ஸ்டார்லிங்கை பயன்படுத்தியது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது. அமெரிக்க படைகளின் நகர்வுகள், அங்கே தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை அரிய ஈரான் ராணுவம் ஸ்டார்லிங்க் இணைய சேவைகளை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

Also Read

இதற்கிடையே போர்களில் ஸ்டார்லிங்கின் சாத்தியமான பயன்பாடு குறித்து ஸ்பேஸ்எக்ஸ் ஆய்வு செய்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் டெர்மினல்கள் செல்வதை தடுக்க ஸ்டார்லிங்க் விற்பனை வலையமைப்பில் கட்டுப்பாடுகள் கடுமையாகப்பட்டுள்ளன என்றும் துணை மறுவிற்பனையாளர்கள் மூலம் டெர்மினல்களை விநியோகிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் ஸ்டார்லிங்க் செயல்பட அதிகாரப்பூர்வ உரிமம் இல்லை என்றாலும், அங்கு சேவை செயலில் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Recommended For You

ஏனெனில் ஜனவரி மாதம், ஈரானில் அரசு எதிர்ப்பு போராட்டங்களின் போது ஈரான் அரசு இணைய தடையை விதித்ததை தொடர்ந்து, ஸ்டார்லிங்க் தனது சேவையை ஈரானில் உள்ள பயனர்களுக்கு கட்டணமின்றி வழங்கியதாக தகவல் வந்தது. மேலும், போராட்டங்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் டெர்மினல்களை அமெரிக்க அரசாங்கம் ஈரானுக்குள் கடத்தியதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது.

அப்படி ஈரானுக்கு எதிரான போராட்டங்களுக்காக கொண்டு செல்லபப்ட்ட ஸ்டார்லிங்க் சேடிலைட் டெர்மினல்கள் தற்போது ஈரானுக்கு சாதகமாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் பயன்படுத்தபட்டுள்ளன. உக்ரைன் போர்க்களத்திலும் ரஷ்யா ஸ்டார்லிங்க் டெர்மினல்களை கடத்தி வந்து பயன்படுத்தியதாக முதலில் தகவல் வந்தது. மோதல் பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையற்ற இணையத்தை வழங்குவதற்கும் ராணுவத்திற்கும் உதவவும் உக்ரைன் அரசு ஸ்டார்லிங்கை பயன்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+