விரிச்சுவல் கரன்சி குறித்துப் புரிதலை பெற்று அதிக லாபம் பெற ஜப்பானிய நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்குப் பிட்காயினில் சம்பளத்தினை அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் பிட்காயின் முதலீட்டைச் செய்ய வேண்டாம் என்று அர்பிஐ கூறி வரும் நிலையில் ஜப்பான் நிறுவனத்தின் இந்த முடிவு ஆச்சர்யமாக உள்ளது.
ஜிஎம்ஓ இண்டெர்னெட்
ஜிஎம்ஓ இண்டெர்னெட் எனப்படும் இணையதளம் சார்ந்த ஃபினான்ஸ், விளம்பரம் மற்றும் இண்டெர்னெட் இன்பிராஸ்ட்ரக்ச்சர் போன்ற சேவை அளித்து வரும் ஜப்பான் நிறுவனம் வருகின்ற ஆண்டுப் பிப்ரவரி மாதம் முதல் 100,000 யென் வரை பிட்காயினாகச் சம்பளத்தினை அளிக்க உள்ளது.
யாருக்கு எல்லாம் பிட்காயினில் சம்பளம் அளிக்கப்படும்
பிட்காயினாகச் சம்பளத்தினைப் பெற விரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த முறையில் சம்பளம் வழங்க உள்ளதாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஹருமி இஷிஹி தெரிவித்துள்ளார். இதனால் விரிச்சுவல் கரன்சி தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எத்தனை ஊழியர்கள்
ஜிஎம்ஓ குழுமத்தில் பணிபுரிகின்ற 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிட்காயின் மூலம் சம்பளம் பெற விருப்பம் தெர்வித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிட்காயின் டிரேடிங்
ஜிஎம்ஓ நிறுவனம் சென்ற மே மாதம் முதல் பிட்காயின் டிரேடிங் மற்றும் எக்ஸ்சேஞ் வணிகத்தினைத் துவங்கியுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு முதல் பிட்காயின் மைனிங் வணிகத்தினைச் செய்வது மட்டும் இல்லாமல் பிட்காயின் மூலம் ரிவார்டுகளை அளிக்கும் திட்டத்தினையும் அறிமுகம் செய்ய உள்ளனர்.
பிட்காயின்
உலகளவில் கடந்த சில வாரங்களாகப் பிட்காயின் பல மடங்கு உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1,000 டாலர்கார் இருந்த ஒரு பிட்காயினின் மதிப்புத் தற்போது 17,000 டாலர் மதிப்பினை பெற்றுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications