கடன் நெருக்கடியால் ஐடி வர்த்தகம் விற்பனை.. டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு..!

டெக்சாஸ்: உலகின் முன்னணி வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான டெல், தனது ஐடி சேவை வர்த்தகத்தை ஜப்பான் நாட்டின் என்டிடி டேட்டா நிறுவனத்திற்கு முழுமையாக விற்பனை செய்துள்ளது.

டெல் நிறுவன ஐடி வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்கு இரு நிறுவனத்தின் நிர்வாக மட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்கள் ஒப்புதல்களுக்காக இப்பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டீலின் மொத்த மதிப்பு 3 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த நிலை..?

ஏன் இந்த நிலை..?

டெல் நிறுவனம் வன்பொருள் மற்றும் மென்பொருள் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், வெறும் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை விற்பனை செய்யும் அளவிற்கு என்ன ஆனாது..?

இவற்றுக்கு எல்லாம் காரணம் EMC2 நிறுவனம் தான்.

 

67 பில்லியன் டாலர் டீல்..

67 பில்லியன் டாலர் டீல்..

2015ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் மிகப்பெரிய டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனமான EMC2 நிறுவனத்தை, டெல் சுமார் 67 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்புக்கொண்டது. இந்த டீல் வருகிற மே - அக்டோபர் மாதத்திற்குள் முடிய உள்ளது.

இந்தக் கைப்பற்றும் திட்டத்தால் டெல் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இச்சுமையைக் குறைக்கவே தனது ஐடி சேவை வர்த்தகத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளது டெல்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...

என்டிடி டேட்டா

என்டிடி டேட்டா

டெல் நிறுவனத்தின் ஐடி சேவையைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச சந்தையில் என்டிடி டேட்டா மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும், மேலும் புதிய வர்த்தகம் மற்றும் சந்தைகளை அடையவும் வாய்ப்புகள் உள்ளது என நாங்கள் நம்புகிறோம் என என்டிடி டேட்டா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஈஓ Toshio Iwamoto தெரிவித்தார்.

புதிய சந்தைகள்

புதிய சந்தைகள்

டெல் நிறுவனத்தின் ஐடி வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம் என்டிடி டேட்டா நிறுவனத்தின் வட அமெரிக்கச் சந்தை வர்த்தகம் வலிமையடையும், அதுமட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் இந்நிறுவனத்தின் டெலிவரி மேம்படும்.

மேலும் என்டிடி டேட்டா நிறுவனத்தின் பிபிஓ, ஹெல்த்கேர் மற்றும் இன்சூரன்ஸ் துறையில் வர்த்தக விரிவாக்கத்தையும் செய்யச் சாதகமான வாய்ப்புகள் குவிந்துள்ளது.

 

டேட்டா சென்டர்

டேட்டா சென்டர்

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகள் உட்படத் தற்போது என்டிடி டேட்டா நிறுவனத்தின் கையில் சுமார் 230 டேட்டா சென்டர்கள் உள்ளது. இதில் டெல் நிறுவனத்தின் பங்கு அதிகம்.

டெல் ஐடி வர்த்தகம்

டெல் ஐடி வர்த்தகம்

இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை வலிமை பெற டெல் நிர்வாகம் விப்ரோ நிறுவனத்தின் சுரேஷ் வாஸ்வானி தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பின் நிறுவனம் கணிசமான வளர்ச்சியை மட்டுமே டெல் ஐடி வர்த்தகம் எட்டியதால், கடன் சுமையில் தவிக்கும் டெல் இதனை விற்பனை செய்துள்ளது.

இந்தியா

இந்தியா

டெல் நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, நொய்டா, சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

பெட்ரோ சிஸ்டம்ஸ்

பெட்ரோ சிஸ்டம்ஸ்

2009ஆம் ஆண்டு டெல் நிறுவன சேவையை விரிவாக்கம் செய்யும் பொருட்டுப் பெட்ரோ சிஸ்டம்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தை 3.9 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே துவங்கியது தொடர் விரிவாக்கமும், கடன் நெருக்கடியும்.

 

கோடீஸ்வர வாரிசுகள்...!

கோடீஸ்வர வாரிசுகள்...!

கண்ணு கட்டுதுடா சாமி முடியல..

கண்ணு கட்டுதுடா சாமி முடியல..

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

 

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+