டால்பாட்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான சஞ்சீவ் குப்தா முடங்கிப்போன டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வேல்ஸ் ஸ்டீல் தொழிற்சாலையைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளார்.
இதனால் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் 4,000 தொழிலாளர்கள் மீண்டும் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளனர்.
டாடா ஸ்டீல்
பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டால்பாட் தொழிற்சாலை வர்த்தகச் சரிவு மற்றும் அதிகளவிலான செலவினம் போன்ற முக்கியக் காரணங்களால் இத்தொழிற்சாலையை விற்பனை செய்ய டாடா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனுடன் சேர்த்து டாடா ஸ்டீல் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையான வேல்ஸ் தொழிற்சாலையும் விற்பனை செய்யச் சைரஸ் மிஸ்திரி தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.
சஞ்சீவ் குப்தா
இந்நிலையில் இத்தொழிற்சாலையின் மூலம் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைய முடியும் என நம்பிக்கை வைத்த Liberty ஹவுஸ் குரூப் தலைவர் சஞ்சீவ் குப்தா பிரிட்டன் வேல்ஸ் தொழிற்சாலையைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார்.
சைரஸ் மிஸ்திரி
ஏற்கனவே ஸ்டீல் உற்பத்தி மற்றும் தயாரிப்பில் இருக்கும் Liberty ஹவுஸ் குரூப் தலைவர் சஞ்சீவ் குப்தா டாடா ஸ்டீல் நிர்வாகத்தைத் தொழிற்சாலையை விற்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பல முறையைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி தலைமையிலான குழு பிரிட்டன் சந்தையில் உள்ள ஸ்டீல் வர்த்தகத்தை முழுமையாக விற்பனை செய்யத் திட்டமிட்டது.
திங்கட்கிழமை
இந்நிலையில் டால்பாட் மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ள இரு தொழிற்சாலைகளையும் விற்பனை செய்யும் பணியை டாடா ஸ்டீல் நிர்வாகம் திங்கட்கிழமை துவங்கிய நிலையில், சஞ்சீவ் குப்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஊழியர்கள் நிலை..
இந்த இரு இத்தொழிற்சாலைகளை விற்பனை செய்யப்படுவதன் மூலம் இத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் 15,000 ஊழியர்களுக்கு டாடா நிர்வாகம் கவர்ச்சிகரமான விடுப்புத் தொகை மற்றும் விஆர்ஸ் திட்டங்களை அளிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா
பிரிட்டன் ஸ்டீல் சந்தையின் வீழ்ச்சிக்குச் சீன நாட்டின் மலிவான ஸ்டீல் பொருட்கள் முக்கியக் காரணமாகும். இந்நிலையில் இச்சந்தையின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த சீன அரசையும், சீன நிறுவனங்களும் எஃகு மற்றும் ஸ்டீல் பொருட்களின் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டது.
டாடா
டிசிஎஸ்
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications