பிரிட்டன், போர்ட் டால்பாட்: நாட்டின் முன்னணி வர்த்தகக் குழும நிறுவனமான டாடா, இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பிரட்டனில் இருக்கும் டாடா நிறுவனத்தின் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை, கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவை அடைந்து வருவதால் இத்தொழிற்சாலையை முழுமையாக மூட டாடா ஸ்டீல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எத்தகைய முடிவையும் எடுங்கள்..!
டாடா குழுமத்தின் ஐரோப்பிய நிர்வாகக் குழுமம் இந்நிறுவனத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்ட வர எத்தகைய முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம் எனவும், தேவைப்பட்டால் ஐரோப்பிய வர்த்தகத்தைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யவும் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை
இந்நிலையில் நிர்வாகத்தின் தொழிற்சாலை மூடும் நடவடிக்கையைக் கைவிடுமாறு டாடா நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப் பிரட்டன் ஸ்டீல் தொழிற்சாலையின் யூனியன் தலைவர்கள் மும்பை வந்துள்ளனர்.
அரசு அறிவுரை..
பிரிட்டன் ஸ்டீல் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு எனவே நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துமாறு பிரிட்டன் மற்றும் வெல்ஸ் அரசுகள் டாடா நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் தற்போது தொழிற்சாலை மற்றும் நிர்வாகம் சந்தித்து வரும் பிரச்சனை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் பிரிட்டன் மற்றும் Welsh அரசுகள் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஏன் இந்த நிலை..?
சர்வதேச சந்தையில் நிலவும் அதீத ஸ்டீல் இருப்பு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான ஸ்டீல் பொருட்களால் இந்நிறுவனத்தின் அதிக விலை மதிப்புடைய ஸ்டீல் பொருட்களின் விற்பனை பாதித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையை மாற்ற டாடா ஸ்டீல் நிர்வாகம் தொடர்ந்து போராடி வந்தாலும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை.
தொடர் சரிவு..
நிர்வாகத்தின் யுத்திகள் மற்றும் செயல்பாடுகள் சந்தையில் பலன் அளிக்காமல் போனதால் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
பிரிட்டன் சந்தை
டாடா நிறுவனம் பிரிட்டன் சந்தையில் தனது ஸ்டீல் உற்பத்தியைக் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
பணிநீக்கம்..
இந்நிறுவனத்தின் தொடர் வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவை ஈடு செய்ய ஜனவரி மாதம் சுமார் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகப் பிரிட்டன் டாடா ஸ்டீல் நிர்வாகம் அறிவித்தது.
மிகவும் மோசமான நிலை..
தற்போதைய நிலையில், தொழிற்சாலையை முழுமையாக மூடத் திட்டமிட்டுள்ளதால் டால்மாட் துறைமுகத்தில் பணியாற்றும் 750 ஊழியர்கள், மொத்த பிரிட்டன் தொழிற்சாலையில் பணியாற்றும் 4000 ஊழியர்கள் மற்றும் 3,000 கான்ட்ராக்டர் மற்றும் பகுதி நேர ஊழியர்கள் எனச் சுமார் 7,750 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
ஊழல்
அள்ளிக்கொடுத்த அமெரிக்க நிறுவனங்கள்..!
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications