திடீரென மூடப்பட்ட வங்கி.. வெள்ளிக்கிழமை மாலை வந்த அறிவிப்பு.. ஆடிப்போன மக்கள்..!

ஒட்டுமொத்த அமெரிக்காவும் தேங்க்ஸ் கிவ்விங் கொண்டாட்டத்தில் இருக்கும் வேளையில், இந்தியானா மாகாணத்தின், Evansville நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் யுனைடெட் ஃபிடெலிட்டி வங்கி வெள்ளிக்கிழமை அந்நாட்டின் மத்திய வங்கி ஒழுங்குமுறை அமைப்பான FDIC மூட உத்தரவிட்டது.

இவ்வங்கி மூடப்பட்டதைத் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ந்து போகும் முன்பு, இவ்வங்கிக்கான தீர்வை முன்வைக்கப்பட்டது.

திடீரென மூடப்பட்ட வங்கி.. வெள்ளிக்கிழமை மாலை வந்த அறிவிப்பு.. ஆடிப்போன மக்கள்..!

அதாவது யுனைடெட் ஃபிடெலிட்டி வங்கியின் அனைத்து வைப்பு நிதி மற்றும் சொத்துக்களை ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் யுனைடெட் ஃபிடெலிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் வாடிக்கையாளராக மாறுவார்கள்.

இதேபோல் ஃபிடெலிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் எவ்விதமான நிதி இழப்பையும், சேவைகள் தடையும் இல்லாமல், செக் புக், டெபிட் கார்டு, ஏடிஎம், 22 வங்கி கிளைகள் என அனைத்தும் முழுமையாக இயங்க முடியும்.

Also Read

ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க், ஃபிடெலிட்டி வங்கி சொத்துக்களை சுமார் 2.6 பில்லியன் டாலர் தள்ளுபடியில் கைப்பற்ற உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரத்தின் படி யுனைடெட் ஃபிடெலிட்டி வங்கியின் சொத்து மதிப்பு 5.9 பில்லியன் டாலராகும், வைப்பு நிதி 4.5 பில்லியன் டாலர், கடன் வர்த்தகம் 3.1 பில்லியன் டாலர். இந்த கைப்பற்றல் மூலம் FDIC அமைப்பு டெப்பாசிட் இன்சூரன்ஸ் ஆக 1.8 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது.

ஒருபக்கம் ஏஐ மீதான முதலீடுகள் என்னாகும் என டெக் நிறுவனங்களும், டெக் நிறுவனங்களுக்கும் கடன் கொடுத்த வங்கிகளும் பீதியில் இருக்கும் வேளையில் அமெரிக்காவில் வங்கிகள் அடுத்தடுத்து முடங்கி வருகிறது.

Recommended For You

2024ஆம் ஆண்டுக்குப் பின்பு அமெரிக்காவில் மூடப்பட்ட மிகப்பெரிய வங்கியாக திகழ்கிறது இந்த United Fidelity Bank, இது மட்டும் அல்லாமல் 2026ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 6 சிறு சிறு வங்கிகள் மூடப்பட்ட நிலையில் இது 7வது வாங்கியாகும்.

அக்டோபர் 2023ல் இருந்து தொடர்ந்து அமெரிக்க நாணயக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் கேள்வி எழுப்பப்பட்டும், தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், வங்கி நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்தத் தொடர்ந்து வாய்ப்பு அளித்தும் பூர்த்தி செய்யவில்லை.

இந்த நிலையில் நாணயக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் United Fidelity Bank-ல் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் பாதுகாப்பற்றதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து FDIC இவ்வங்கியை முடக்கி அனைத்து சொத்துக்களையும் கைப்பற்ற உத்தரவிட்டது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு மூடப்பட்ட 6 வங்கிகளின் லிஸ்ட் Metropolitan Capital Bank & Trust, Community Bank and Trust - West Georgia, Kentland Federal Savings and Loan Association, Small Business Bank, Tioga-Franklin Savings Bank, Nano Banc. இந்த அனைத்து வங்கிகளுக்கும் சக போட்டி நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கிய வங்கிகளை வாங்குவதில் First Citizens Bank தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, 2023 மார்ச் மாதம் Silicon Valley Bank சரிந்தபோது, அதன் பெரும்பாலான வைப்புத்தொகைகள் மற்றும் கடன்களை First Citizens வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+