சொந்தமாக பிஸ்னஸ் செய்பவரா நீ்ங்கள்? ஜிஎஸ்டி-க்கு மாறுவது இப்போ ரொம்ப ஈஸி..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி ஆட்சி முறைக்கு மாற இருக்கின்றது. நீங்கள் சொந்தமாக வணிகம் செய்து வருகிறீர்கள் என்றால் ஜிஎஸ்டி முறைக்கு மாற வேண்டியது அவசியம் ஆகும். அதற்காக இது ஒரு கடினமான பணியாக இருக்க வேண்டும் என்று குழப்பம் அடைய வேண்டாம்.

உங்கள் வணிகத்தை மாற்றுவது மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் இணையதளங்களில் எப்படிப் பயனராகச் சேர்கிறீர்களோ அதே மாதிரியான எளிமையான முறை தான்.

எனவே 10 படிகளில் உங்கள் வணிகத்தை எப்படி ஜிஎஸ்டி முறைக்கு மாற்றுவது என்று இங்குப் பார்ப்போம்.

உள்நுழைதல்

www.aces.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி உங்களிடம் ஏற்கனவே உள்ள ஆடோமேஷன் ஆப் செண்ட்ரல் எக்சைஸ் அண்ட் சர்வீஸ் (ACES) பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் வைத்து உள்நுழைய வேண்டும்.

தற்காலிக ஐடி மற்றும் கடவுச்சொல்

இங்குக் கிளிக் (Click Here) செய்யவும் என்பதைத் தட்டுவதன் மூலமாகத் தற்காலிக ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பார்க்கலாம்.

பொது ஜிஎஸ்டி தளத்தில் உள்நுழைதல்

www.gst.gov.in என்ற இணையதளத்தில் புதிய பயனர் கணக்கை உருவாக்கவும் என்பதைத் தேர்வு செய்து நான் இதை ஏற்கிறேன் (I agree) என்பதைத் தேர்வு செய்து தொடரவும் (Continue) என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4

உங்கள் தற்காலிக ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவினை உள்ளிட்டு உள்நுழைக (login) என்பதைத் தட்டவும்.

படி 5

ஒரு முறை கடவுச் சொல்லைப் பெற உங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

படி 6

இங்கு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்குக் கிடைத்த கடவுச் சொல்லினை உள்ளிட்டுத் தொடரவும் என்பதி கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கான புதிய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக முடியும். கடவுச் சொல் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் அனுப்பவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் கடவுச் சொல்லினை மீண்டும் பெறலாம்.

பாதுகாப்புக் கேள்விகள்

பயனர் ஐடி, கடவுச் சொல் இரண்டையும் உருவாக்கிய பிறகு தொடர்வும் என்பதைக் கிள்க் செய்த பிறகு பாதுகாப்புக் கேள்விகளுக்குப் பதில் அளித்துச் சமர்ப்பிக்கவும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

படிவம் 20

படிவம் 20 ல் 'வணிக விவரங்கள்', 'ஊக்குவிப்பு மற்றும் பங்குதாரர்கள்', 'அங்கீகாரம் பெற்ற கையொப்பம்', 'வியாபார இடம்', 'கூடுதல் வணிகம்', 'வங்கி கணக்கு'ப் 'பொருட்கள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

ஆதரவு விவரங்கள்

ஆதரவு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் கையெழுத்து விவரங்கள் ல்லது மின்னணு கையொப்பத்தைப் பதிவேற்றவும்.

படி 10

இது உங்களுடைய விண்ணப்ப குறிப்பு எண் (ARN) அளித்து உங்கள் டிக்கெட்டை ஜிஎஸ்டிக்கு இடம்பெயரச் செய்யும்.

இதுப்போன்று மேலும் பல பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் படித்துப் பயன்பெறுங்கள்.

 

வீடியோ

மேலே கூறிய முழு விவர்ங்களியும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Have a business? Here is a step guide for migrating to GST in Tamil

Have a business? Here is a step guide for migrating to GST in Tamil
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC