வங்கியில் ஏதேனும் ஒரு வேலை எனில் மணிக்கணக்கில் வங்கிக் கிளையில் காத்துக் கிடந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) போன்ற வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டை பெறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளன. பொதுவாக வங்கிக் கணக்கு தொடங்கும் போது வாங்கிக் கொள்ளலாம். சிலர் வாங்கிய கார்டை தொலைத்திருக்கலாம். மீண்டும் புதிய ஏடிஎம் கார்டு விண்ணப்பிக்க நேரம் இல்லாமல் இருக்கலாம். அப்படியானவர்கள் இனி கவலையே வேண்டாம், ஏனெனில் இன்றைய காலத்தில் வங்கிகள் பெரும்பாலும் ஆன்லைனிலேயே அந்த வசதியை கொண்டு வந்து விட்டன.
உங்கள் கையில் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் இருந்தால் போதும், வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்து விடலாம். உதாரணத்திற்கு இன்று நாம் எஸ்பிஐ -யின் கார்டை எப்படி ஆன்லைன் பேங்கிங், யோனோ (YONO) ஆப், கஸ்டமர் கேர் அல்லது பாரம்பரியமான ஆஃப்லைன் முறை எனப் பல வழிகளில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதை எப்படி வீட்டில் இருந்தே விண்ணப்பிப்பது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

இணைய வங்கியின் மூலம் எப்படி?
எஸ்பிஐ-யின் இணைய வங்கியின் மூலம் டெபிட் கார்டுக்கு சில நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம்.
ஸ்டெப் 1: எஸ்பிஐ வங்கியின் இணைய வங்கி பக்கத்திற்கு சென்று, அங்கு உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: தொடங்கும் பக்கத்தில் இருக்கும் e-Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அடுத்து லிஸ்டில் இருக்கும் ஏடிஎம் கார்டு சர்வீசஸ் என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அடுத்து Request ATM/Debit Card என்பதை கிளிக் செய்யுங்கள்
ஸ்டெப் 5: டிஸ்பிளேயில் தெரியும் வங்கிக் கணக்கில் எந்த கணக்கிற்கு கார்டு வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால் அனைத்தும் தென்படும். ஒரே வங்கிக் கணக்கு எனில், அதை தேர்வு செய்து கொள்ளவும்.
ஸ்டெப் 6: கார்டில் பிரிண்ட் செய்யப்பட வேண்டிய பெயர் மற்றும் எந்த வகையான கார்டு என்பதையும் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 7: கார்டை தேர்வு செய்த பிறகு Request OTP என்பதை கொடுக்கவும் . அதன் பிறகு ஓடிபி வெரிபை செய்து உங்களுடைய அப்ளிகேஷனை சப்மிட் செய்யவும். அதை கொடுத்த பிறகு வரும் Reference Number-ஐ சேமித்து வைத்துக் கொள்ளவும். இது உங்களுடைய கார்டின் நிலையை தெரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.
யோனோ ஆப்பில் எப்படி?
தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
ஸ்டெப் 1: யோனோ ஆப்பை லாகின் செய்து கொள்ளுங்கள்
ஸ்டெப் 2: அதில் சர்வீசஸ் ரெக்வஸ்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள்
ஸ்டெப் 3: ஏடிஎம்/டெபிட் கார்டு என்பதை தேர்வு செய்யுங்கள்
ஸ்டெப் 4: அடுத்து புதிய கார்டு அல்லது Replacement card என்பதை கொடுக்க வேண்டும்.
ஸ்டெப் 5: எந்த கணக்குடன் தொடர்புடைய கார்டு என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்
ஸ்டெப் 6: உங்கள் கார்டில் பொறிக்கப்பட வேண்டிய பெயர் மற்றும் முகவரியை கொடுங்கள்
ஸ்டெப் 7: உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி கொடுத்து வெரிபை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு கார்டு ஓரிரு வாரங்களில் டெலிவரி செய்யப்படும்.
பான் - ஆதார் இன்னும் லிங்க் பண்ணலயா? ஆன்லைனில் ஈஸியா லிங்க் செய்வது எப்படி?
வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் எப்படி?
நீங்கள் எஸ்பிஐ -யின் வாடிக்கையாளர் சேவை மைய உதவியுடனும் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஸ்டெப்: முதலில் 1800 425 3800 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
ஸ்டெப் 2; நீங்கள் வாடிக்கையாளர் தானா என உறுதி செய்த உடன், சேவை மையத்தில் உங்கள் ஏடிஎம் கார்டுக்கான கோரிக்கையை வைக்கலாம்.
ஸ்டெப் 3: உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு உறுதி செய்தி வரும். அதன் மூலம் உங்கள் கார்டின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் புதிய பணக்கார சாதனை: ஒரே வருடத்தில் 57 புதிய பில்லியனர்கள்!ஆசியாவின் டாப் யார்?
கிளைக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்?
உங்கள் எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஸ்டெப் 1: அருகே உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு செல்லவும்
ஸ்டெப் 2: அங்குள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் ஏடிஎம் கார்டுக்கான விண்ணப்பத்தை பெற்று, தேவையான விவரங்களை பிழை இல்லாமல் பூர்த்தி செய்து கொடுக்கவும்.
ஸ்டெப் 3: அத்துடன் உங்களுடைய பான் கார்டு அல்லது முகவரி சான்று அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஸ்டெப் 4: உங்கள் கோரிக்கையானது சரியாக இருக்கும் பட்சத்தில், வங்கி அதற்கான ஒப்புதல் கொடுக்கும். விரைவில் உங்கள் கார்டு பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு கிடைக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications