தமிழகத்தின் தங்கம் விற்பனையில் மையப்புள்ளிகளாக திகழும் சென்னை மற்றும் கோவையில், இன்று தங்கம் விலை பெரிய மாற்றம் ஏதும் காணவில்லை. கடந்த சில நாட்களாக சற்று அழுத்தத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம். தங்கம் விலை தான் குறையவே இல்லையே. அப்புறம் என்ன இன்ப அதிர்ச்சி என பலரும் கேள்வி எழுப்பலாம்.
இன்றைய காலகட்டத்தில் தங்கம் விலை ஏற்றம் காணாமல் இருப்பதே நல்ல விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்த வரையில் தங்கம் என்பது வெறும் அழகு சாதன பொருள் மட்டுமல்ல, அது கலாச்சாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்ச் மாத திருமண முகூர்த்தங்கள் நெருங்கும் வேளையில், விலை குறைய வாய்ப்புள்ளதா அல்லது இப்போதே வாங்கிவிடுவது புத்திசாலித்தனமா? என பல கேள்விகள் நடுத்தர மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் என பலவும் தங்கம் விலையில் பரமபதம் விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், சென்னை மற்றும் கோவையின் இன்றைய துல்லியமான விலை நிலவரத்தையும், இன்றைய சந்தை நிலவரத்தையும் பார்க்கலாம் வாருங்கள்.
கடந்த சில தினங்களாக அப்பாடா பரவாயில்லையே என்னும் அளவுக்கு தங்கம் விலையானது சற்று குறையத் தொடங்கியுள்ளது. அதுவும் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் குறைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஒருங்கிணைந்த கட்டத்தை எட்டி வரும் தங்கம் மீண்டும் பாய்வதற்காகவா அல்லது செல்லிங் அழுத்தம் அதிகமாக இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது உண்மையில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் தான்.
தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!
தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது, கடந்த வாரம் உச்சத்தை தொட்ட தங்கம், தற்போது ஒரு சிறிய சரிவை சந்தித்து வருகிறது. நிபுணர்களின் கருத்துப்படி, அடுத்த சில நாட்களுக்கு விலை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே இருக்க வாய்ப்புள்ளது. ஆக நீங்கள் நீண்ட கால முதலீடாகவோ அல்லது திருமணத் தேவைக்காகவோ வாங்கத் திட்டமிட்டால், இந்த சிறிய விலை சரிவை பயன்படுத்தி ஒரு பகுதியை இப்போது வாங்கலாம். இல்லை இல்லை சந்தை இன்னும் சற்று கீழே இறங்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், வரும் வாரத்தின் தொடக்கம் வரை காத்திருந்து பார்க்கலாம். ஆனால் தங்கம் விலை மீண்டும் எப்போது எகிறும் என்று கணிக்க முடியாது என்பதால், தேவை இருப்பவர்கள் இப்போதே திட்டமிடுவது நல்லது. ஏனெனில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் எப்போது எங்கு வெடித்து சிதறுமோ என்ற பதற்றமே அதிகம் காணப்படுகிறது. ஈரானும் அதற்கு சளைத்ததாக தெரியவில்லை. ஆக இப்போதைக்கு இப்போர் முடிவுக்கு வரலாம் என கூறிவிட முடியாது. ஆக இன்னும் சிறிது காலத்துக்கு இந்த பதற்றம் நீடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாகவே செயல்படும்.
மேற்கொண்டு சர்வதேச அளவிலான பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலையேற்றம், பணவீக்கம் குறித்த கவலை என பலவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். சில தினங்களுக்கு முன்பு ஜாய்ஆலுக்காஸின் தலைவர் ஜாய், தங்கம் விலை தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கவே செய்யும் என கூறியது நினைவில் கொள்ளத்தக்கது. மேலும் தன்னிடம் 16,000 கிலோ தங்கம் இருப்பதாகவும் கூறியிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
இன்று சென்னை மற்றும் கோவையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 16,319 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் விலை 14,959 ரூபாயாகவும், 18 கேரட் தங்கம் விலை 13,029 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 290 ரூபாயாகவும், கிலோவுக்கு 2,90,000 ரூபாயாகவும் காணப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications