தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தின் விலை உயர்வு என்பது இப்போது வெறும் செய்தியல்ல, அது பல குடும்பங்களின் பட்ஜெட்டை தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது. தற்போதைய சூழலில் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கே நாம் யோசித்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு தனிநபர் 16,000 கிலோ (16 டன்) தங்கத்தை தன் கைவசம் வைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது உண்மைதான். புகழ்பெற்ற அந்த பில்லியனர் இவ்வளவு பிரம்மாண்டமான தங்க இருப்பை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு அதிரடியான கணிப்பையும் வெளியிட்டுள்ளார்.

தங்கம் விலை இனி இறங்குவதற்கு வழியே இல்லை, அது ஒரே திசையில் ராக்கெட் வேகத்தில் மட்டுமே செல்லும் என்பதுதான் அந்த ஜாம்பவானின் ஆணித்தரமான வாதமாகவும் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றங்களை முன்கூட்டியே கணித்து தான் அவர் இவ்வளவு தங்கத்தை குவித்து வைத்திருக்கிறாரா? அவர் குறிப்பிடும் அந்த ஒரே திசை எது? தங்கத்தின் விலை வரும் காலங்களில் மீண்டும் உச்சத்தை தொடப் போகிறதா? முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த ரகசியத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

16 டன் தங்கத்தை வாங்கி வைத்திருக்கும் அந்த ஜாம்பவான் வேறு யாருமல்ல, ஜாய் ஆலுக்காஸ் குழும தலைவரான ஜாய் ஆலுக்காஸ் தான். ஜாயின் குடும்பத்தினரால் நடத்தப்படும் மிகப்பெரிய நகை வணிகங்களில் ஒன்றான இவரது நிறுவனம், இன்னும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம்.

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் 16,000 கிலோ தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் நகைகள் மட்டுமல்லாமல், தங்க கட்டிகளும் அடங்கும். தங்கம் விலை ஏற்றம் குறித்து கூறுகையில், அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து விலை அதிகரிக்கவே செய்யும். இது அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மத்தியில், நிச்சயமற்ற பொருளாதார சூழல் காணப்படுகிறது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் என கூறுகிறார்.
பூமிக்கு அடியில் 4 கி மீ! ஆச்சரியப்படுத்தும் உலகின் ஆழமான சுரங்கம்- வருஷத்துக்கு 8,000 கிலோ தங்கம்!
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 5,200 டாலர்களுக்கு அருகில் காணப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் 75%-க்கு மேலாக காணப்படுகிறது. இந்த் நிலையில் ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனம் தற்போது துபாய், இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்த்து, 200-க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கொண்டுள்ளது. இது தொடர்ந்து கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆலுக்காஸின் இந்த இருப்பானது ஒன்று இரண்டு ஆண்டுகளில் அல்ல, கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக சேர்க்கப்பட்டதாகும். இது தொடர்ந்து ஆலுக்காஸின் சந்தை மதிப்பை காரணமாக அமைந்துள்ளது. இது அதிகரித்து வரும் செலவினங்களை சமாளிக்கவும் உதவியாகவும் இருக்கும். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸின் படி, ஜாயின் நிகர மதிப்பு 5.8 பில்லியன் டாலராகவும் உள்ளது.
PPF: எல்ஐசியின் ரசிகர்களும் பிபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம்.. ரூ.1 கோடி வருமானம் எப்படி பார்ப்பது?
முன்பெல்லாம் ஜாய் ஆலுக்காஸ் கடைகளில் கொலுசு, அரணாக்கொடி போன்ற அலங்கார பொருட்கள் மட்டுமே வெள்ளியில் அதிகம் விற்பனையாகும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்கள் தற்போதைய காலத்தில் 10 கிராம் மற்றும் 50 கிராம் வெள்ளி கட்டிகளை ஒரு முதலீடாக விரும்பி வாங்க தொடங்கியுள்ளனர். இது தங்கம் விலையானது அதிகரித்து வரும் சூழலில், அதற்கு மாற்றாக வெள்ளியை ஒரு லாபகரமான முதலீடாக மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளதை காட்டுகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்தது வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை பாதித்துள்ளது. இருப்பினும் மக்கள் தற்போது பெரிய மற்றும் கனமான நகைகளை தவிர்த்து, குறைவான எடையில் நேர்த்தியாக இருக்கும் லைட்வெயிட் நகைகளை அதிகம் தேர்ந்தெடுப்பதாகவும் கூறியுள்ளார். விலையேற்றம் காரணமாக தங்கத்தின் அளவு குறைந்தாலும், நகை வாங்கும் ஆசை குறையவில்லை என்பதையே இது வெளிப்படையாக காட்டுகிறது.
பிபிஎஃப் முதல் என்.எஸ்.சி வரையில்.. சிறந்த 5 சேமிப்பு திட்டங்கள்.. நிரந்தர வருமானம்..!
பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் போது, பல நிறுவனங்கள் விலை சரிவால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க ஹெட்ஜிங் எனும் பாதுகாப்பு முறையை பின்பற்றும். ஆனால், ஜாய் ஆலுக்காஸ் இதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே எங்களுக்கு ஹெட்ஜிங் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இது தங்கத்தின் மீது அவர் வைத்துள்ள வலுவான நம்பிக்கையை காட்டுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+