கோயம்புத்தூர் - எல்பிஜி விலை சர்வதேச சந்தை விலையை அதிகளவில் சார்ந்துள்ளது. கோயம்புத்தூர்- இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 832.00 ஆக உள்ளது.
எல்பிஜி விலை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசால் சர்வதேச விலைக்கு ஈடாகத் திருத்தப்படுகின்றன. எல்பிஜி மிகவும் சுத்தமான எரிபொருளாக அறியப்படுகிறது, மேலும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவதிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
Type | Price | Price Change |
Domestic (14.2 Kg) | ₹ 832.00 | ₹ -100.00 |
Commercial (19 Kg) | ₹ 1,906.50 | ₹ 23.50 |
Domestic (5 Kg) | ₹ 310.00 | ₹ -35.50 |
Commercial (47.5 Kg) | ₹ 4,763.00 | ₹ 59.00 |
தேதி | Domestic (14.2 Kg) | Commercial (19 Kg) |
Feb 2024 | ₹ 932.00 0 | ₹ 1,883.00 12 |
Jan 2024 | ₹ 932.00 0 | ₹ 1,870.50 -5 |
Dec 2023 | ₹ 932.00 0 | ₹ 1,875.00 -14 |
Nov 2023 | ₹ 932.00 0 | ₹ 1,888.50 44 |
Oct 2023 | ₹ 932.00 0 | ₹ 1,844.00 203 |
Sep 2023 | ₹ 932.00 0 | ₹ 1,641.00 -158 |
Aug 2023 | ₹ 932.00 -200 | ₹ 1,798.50 -93 |
Jul 2023 | ₹ 1,132.00 0 | ₹ 1,891.00 |
Jun 2023 | ₹ 1,132.00 0 | - |
May 2023 | ₹ 1,132.00 0 | - |
பாரத் கேஸ்
பாரத் கேஸ் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது பாரத் கேஸின் முதன்மையான வணிகம். பாரத் கேஸ் நிறுவனத்தின் பிரத்தியேக இணையதளம் மூலம், சமையல் எரிவாயு இணைப்பிற்கு விண்ணப்பிப்பது மட்டுமல்லாமல் காலியான சிலிண்டர்களை முன்பதிவு செய்தும் பெற்றுக்கொள்ளலாம். புதிய இணைப்பைப் பெற வாடிக்கையாளர்கள் விண்ணப்பத்துடன் சில பட்டியலிடப்பட்ட ஆவணங்களையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களைப் பரிசீலனை செய்து தேவையான தகுதிகள் இருப்பின் சிலிண்டர்களுக்கு அரசு அளிக்கும் மானியம் வழங்கப்படும். பாரத் கேஸ் இணைப்பை இந்தியாவில் உள்ள எந்த கிளைக்கும் மாற்றம் செய்து சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இண்டேன் கேஸ்
இண்டேன் கேஸ், பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் துணை நிறுவனமாகும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வேண்டும் என்பவர்கள் இண்டேன் நிறுவனத்தை நாடலாம். உங்கள் அருகில் உள்ள இண்டேன் கேஸ் வினியோகஸ்தரிடம் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்களிடம் உள்ள பல்வேறு திட்டங்களில் ஒன்றின் கீழ் புதிய இணைப்பைப் பெறலாம். விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் ரீஃபில் சிலிண்டரளை வினியோகஸ்தரிடம் புக் செய்து, எஸ்எம்எஸ், போன் கால், இணையதளம் மூலம் புக் செய்யலாம். வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இணைப்பை இண்டேன் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளலாம்.
ஹெ.பி கேஸ்
பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ப்ட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிட்டடின் துணை நிறுவனம் ஹெச்.பி கேஸ். இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது இந்நிறுவனத்தின் முதன்மையான வணிகம். ஹெச்.பி கேஸ் வாடிக்கையாளர்கள் அரசு பெறும் மானியத்துக்குத் தகுதியானவர்களாக இருந்தால், அவர்களது வங்கி கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும்.ஏற்கனவே ஹெ.பி இணைப்பை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வெளியூர் மாற்றலாகிச் செல்லும் போது அங்கும் இணைப்பை மாற்றிக்கொள்ளலாம். புதிய ஹெச்.பி கேஸ் இணைப்பு வேண்டும் எனும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள விநியோகஸ்தர்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.