முகப்பு  »  எரிபொருள் விலை  »  பெட்ரோல் விலை  »  தமிழ்நாடு  »  கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பெட்ரோல் விலை இன்று (26 ஏப்ரல் 2024)

கோயம்புத்தூர் - பெட்ரோல் விலை சர்வதேச கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மாறி வருகிறது. உறுதியான போக்கைக் காட்டி வருவதால், ஏற்ற இறக்கமாக மாறி வருகிறது. கோயம்புத்தூர் - இன்றைய பெட்ரோல் விலை ₹ 101.23 (26 ஏப்ரல் 2024)
நாம் வாழ்வில் பெட்ரோல்-ஐ தினமும் பயன்படுத்து வரும் நிலையில் எரிபொருள் விலையில் தினசரி ஏற்படும் மாற்றங்களைக் கட்டாயம் அறிந்துகொண்டு செயல்படுத்துவது மூலம் உங்கள் பணத்தைப் பெரிய அளவில் மிச்சப்படுத்த முடியும். பெட்ரோல் விலை கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, மத்திய மாநில அரசின் வரி விதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

Apr 25, 2024
₹ 101.23 /லி ( ₹ -0.22 )

கோயம்புத்தூர்-ல் கடந்த 10 நாள் பெட்ரோல் விலை

தேதி விலை விலை மாற்றம்
Apr 24, 2024 ₹ 101.45 0.17
Apr 23, 2024 ₹ 101.28 0.00
Apr 22, 2024 ₹ 101.28 0.00
Apr 21, 2024 ₹ 101.28 -0.15
Apr 20, 2024 ₹ 101.43 -0.07
Apr 19, 2024 ₹ 101.50 0.22
Apr 18, 2024 ₹ 101.28 0.00
Apr 17, 2024 ₹ 101.28 0.00
Apr 16, 2024 ₹ 101.28 -0.04
Apr 15, 2024 ₹ 101.32 -0.13

கோயம்புத்தூர் இல் தினசரி மற்றும் மாதாந்திர பெட்ரோல் விலை : வரைகலை பிரதிநிதித்துவம்

கோயம்புத்தூர் - பெட்ரோல் விலை வரலாறு

  • Petrol Rate in கோயம்புத்தூர், ஏப்ரல் 2024
  • பெட்ரோல் விலை
    1 ஏப்ரல் ₹ 101.53
    30 ஏப்ரல் ₹ 101.23
    அதிக விலை - ஏப்ரல் ₹ 101.53 ( ஏப்ரல் 1 )
    குறைவான விலை - ஏப்ரல் ₹ 101.23 ( ஏப்ரல் 9 )
    எல்லாவற்றின் செயல்திறன் Falling
    % மாற்றம் 0.30%

  • Petrol Rate in கோயம்புத்தூர், மார்ச் 2024
  • Petrol Rate in கோயம்புத்தூர், பிப்ரவரி 2024
  • Petrol Rate in கோயம்புத்தூர், ஜனவரி 2024
  • Petrol Rate in கோயம்புத்தூர், டிசம்பர் 2023
  • Petrol Rate in கோயம்புத்தூர், நவம்பர் 2023
  • Petrol Rate in கோயம்புத்தூர், அக்டோபர் 2023

கோவையில் பெட்ரோல் விலை தினமும் மாறி வரும் நிலையில், இன்றை விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

இந்தியாவில் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பல்வேறு வரிகள்!

கார், இருசக்கர வாகனங்கள் போன்ற வாகனங்களை வைத்திருக்கும் நடுத்தர, அடித்தட்டு மக்களின் கவலை தினமும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையாகும். காலை எழுந்ததும் இன்றைக்கு பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறதா? இல்லையா? என்ற கவலையே பெரும்பாலானோரை வாட்டிவதைத்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முடிவில்லாமல் உயர்ந்து கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வே, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு காரணம் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து காணப்பட்டாலும், சில்லரை சந்தையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துடன் காணப்படுவதற்கு என்ன காரணம் என்று பலரும் குழம்புவதை பார்த்திருக்கலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையை காட்டிலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அது தான் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வை காட்டிலும், அரசு விதிக்கும் வரிகள் தான் காரணம் என்பதை ஆய்வுகள் பல தெளிவுப்படுத்தி இருக்கின்றன. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. தரவுகளை ஆய்வு செய்தபோது, 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி 54% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

2018-ஆம் ஆண்டு பட்ஜெடில் பெட்ரோல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டபோது, பெட்ரோல் விலை பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது சாலை மேல்வரியாக ரூ.8 விதிக்கப்பட்டதே, பெட்ரோல் விலை குறையாமல் இருந்ததற்கான காரணமாகும்.

பெட்ரோல் விலையை தினமும் முடிவு செய்யும் நடைமுறை நடப்பாண்டில் ஜூன் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதை தொடர்ந்து, பெட்ரோல் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே இருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வரம்புக்குள் பெட்ரோல், டீசல் இல்லாததால், ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறான விலையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. பெட்ரோலின் அசல் விலை, போக்குவரத்து செலவு, கலால் வரி, டீலர் கமிஷன், மாநிலத்திற்கு தகுந்த மதிப்புக்கூட்டுவரி(வாட்) ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், பெட்ரோலின் உண்மையான அடக்க விலையை காட்டிலும், அதன் மீதான வரிவிதிப்பு தான் அதிகமாக காணப்படுகிறது.

2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் தற்போதைய விலை மலிவாகவே உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் விதித்திருக்கும் வரிகளின் கூட்டுத்தொகையோடு கணக்கிட்டால், அப்போதைய விலையை காட்டிலும் தற்போதுள்ள‌ பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்பட்சமாக உள்ளதை தெரிந்து கொள்ளலாம். வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது வாக்குறுதிகளை அள்ளித்தந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் அரசு மக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

 

இந்தியாவில் இன்று பெட்ரோல் விலை எப்படி கணக்கிடப்படுகிறது?

பெட்ரோல் விலை என்பது பல்வேறு அம்சங்களின் ஒட்டுமொத்த விலையாகும்.

இந்தியாவில் இருக்கும் கச்சா எண்ணெயின் கையிருப்பின் அடிப்படையிலான சராசரி விலை, மற்றும் அதன் மீது விதிக்கப்பட்டு பல்வேறு வகையான மதிப்புக்கூட்டு வரி மற்றும் மத்திய கலால் வரி உள்ளிட்டவையின் மொத்த அடக்கமே பெட்ரோல் விலையாகும்.

தற்போதைய நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு விதித்திருக்கும் கலால் வரியின் தொகை ரூ.21 ஆகும். இந்த வரியில் ஏதாவது குறைக்கப்பட்டால், சில்லறை சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் பெட்ரோல், டீசல் மீதான விலையும் குறையும், மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிதிச்சுமையும் குறையும்.

இந்தியாவில், இதுபோன்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மீதான சில்லறை விலையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்தியன் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனி தான், இந்தியாவில் பெட்ரோல் மீதான இன்றைய சில்லறை விலையை நிர்ணயிக்கிறது.

தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலையை இந்நிறுவனம் வெளியிடுகிறது. அதன்பேரில், இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஷெல் போன்ற தனியார் பெட்ரோல் நிலையங்கள், பெட்ரோல் விலையை அந்நிறுவனங்களே முடிவு செய்துகொள்கின்றன. இதன் விலை, பெரும்பாலும் இந்திய ஆயில் கம்பெனி, பிபிசிஎல், எச்பிசிஎல் நிறுவனங்களை விட கூடுதலாகவே இருக்கும்.

கோயம்புத்தூர் - பெட்ரோல் விலை பற்றிய சமீபத்திய அறிவிப்புகள்

பெட்ரோல் விலை ஏப்ரல் 26, 2024 நிலவரம்

கோயம்புத்தூர்-ல் இன்று பெட்ரோல் விலை லிட்டர்க்கு 0.22 ரூபாய் குறைந்து ₹101.23 ஆக உள்ளது. பெட்ரோல் விலை முக்கியமானது, ஏனெனில் அவை மக்களின் நுகர்வோர் பழக்கத்தையும், உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம்.

26 April 2024

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X