வெறும் தோசை, பிரியாணி கடை மட்டும் மூடப்படவில்லை; இந்தியாவின் டிஜிட்டல் கனவான AI தொழில்நுட்பமும் இப்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஈரான்-மத்திய கிழக்கு போர் சூழல், நம் சமையலறையை தாண்டி, டேட்டா சென்டர்கள் வரை எப்படி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியுமா? ஒரு சிறிய எரிவாயு தட்டுப்பாடு, ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியையே எப்படித் தடுத்து நிறுத்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சர்வதேச அளவில் இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியில் இரண்டாவது பெரிய நாடாக இருந்து வருகிறது. ஈரான் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரின் மத்தியில், ஹார்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இது இந்தியா போன்ற பெரிய இறக்குமதியாளர்களுக்கு பெருத்த அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அரசின் பல பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.

உணவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற பிற துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஐடி துறையை எப்படி பாதித்துள்ளது. எரிவாயு பற்றாக்குறைக்கும், ஏஐ (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பத்திற்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பாக இருக்கலாம். ஆனால் பொருளாதார ரீதியாக இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன.
40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
ஏஐ தொழில்நுட்பம் என்பது வெறும் சாப்ட்வேர் மட்டுமல்ல, அதற்கு பின்னால் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்கள் உள்ளன. ஏஐ மாடல்களை இயக்க கம்ப்யூட்டர்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். இதற்கு தேவைப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலமே கிடைக்கிறது. ஆக தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் டேட்டா சென்டர்களை இயக்கும் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவு தாறுமாறாக உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது அதன் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
SIP vs STP vs SWP:சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? முதலீட்டாளர்களின் சக்சஸ் எது?
அரசு வீட்டு உபயோகத்திற்கும், பொது போக்குவரத்திற்கும் எரிவாயுவை முன்னுரிமைப் படுத்துவதால், மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைக்கும் எரிவாயு குறைந்து, மின்வெட்டு அல்லது மின்சார விலையேற்றம் ஏற்படுகிறது. இது ஏஐ கட்டமைப்புகளை நேரடியாக முடக்குகிறது. இதனால் ஐடி நிறுவனங்களின் லாப வரம்பு குறையும். இதனால் புதிய திட்டங்கள் அல்லது ஏஐ தொடர்பான ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது குறையலாம். மேலும் நிறுவனங்கள் செலவை குறைக்க, சம்பள உயர்வை கட்டுப்படுத்துவது அல்லது ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். புதிய ஆட்சேர்ப்பும் குறையலாம்.
இந்த சவாலான காலகட்டத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ், ரூட் மொபைல் லிமிடெட், அஃபிள் (இந்தியா) லிமிடெட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், எல்டிஐமைன்ட் ட்ரீ போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். முதலீட்டாளர்கள் அதிக கிளவுட் செலவுகளை கொண்ட சிறிய மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கையும் வாங்குவதற்கு முன், அந்த நிறுவனம் எந்த அளவுக்கு கிளவுட் சேவைகளை சார்ந்துள்ளது மற்றும் அவர்களின் எரிசக்தி செலவு மேலாண்மை எப்படி உள்ளது என்பதை அவர்களின் காலாண்டு அறிக்கையில் பார்த்து தெரிந்து கொண்டு திட்டமிடுதல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications