40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

நான்கு தசாப்தங்களை கடந்து விட்டோம், இனிமேல் தான் ஓய்வுக்காலத்திற்காக திட்டமிட வேண்டுமா? அப்படியே திட்டமிட்டாலும் இலக்கை அடைய முடியுமா? என்பது தான் பெரும்பாலான 40 வயதுகளில் இருப்பவர்களுக்கு தோன்றும் முதல் கேள்வி. குழந்தைகள் கல்வி, குடும்ப கடன்கள், அன்றாட செலவுகள் என பொருளாதார சக்கரத்தில் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, கோடிக்கணக்கில் ஓய்வூதிய தொகை என்பது எட்டாக்கனியாக தெரியலாம். ஆனால் நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை என்னவென்றால், 40 வயதில் முதலீட்டை தொடங்குவதன் மூலம் கோடிக்கணக்கில் கார்ப்பஸ் சாத்தியம் தான், ஆனால் அது அவ்வளவு எளிதான பாதை அல்ல.

25 வயதில் முதலீட்டை தொடங்குபவர்களுக்கும், 40 வயதில் தொடங்குபவர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் காலம் என்னும் மந்திரக் கோல் தான். கூட்டு வட்டியின் பலனை இழந்துவிட்டோம் என்பதால், அந்த தொகையை ஈடுகட்ட நாம் எவ்வளவு வேகமாக ஓட வேண்டும் தெரியுமா? உதாரணத்திற்கு உங்கள் இலக்கு 3 கோடி ரூபாய் என வைத்துக் கொள்வோம். இலக்கை அடைய இப்போது நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட, உங்கள் ஓய்வுக்காலத்தில் பெரும் சுமையாக மாறும்.

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா?  நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

ஓய்வு காலத்திற்கு தேவையான பெரிய அளவிலான நிதி ஆதாரத்தை உருவாக்குவது என்பது ஒரு முக்கிய செயல்முறை. இதற்கு நீண்ட கால முதலீட்டு உத்தி அவசியம். உங்களின் முதலீட்டு கால அளவு, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் சொத்து உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக முதலீடு செய்வதை தள்ளிப்போடுவது, உங்கள் பணம் சந்தையில் இருக்கும் நேரத்தை குறைக்கிறது, இது கூட்டு வட்டியின் பலனை பாதிக்கிறது. ஈட்டிய லாபத்தை மீண்டும் முதலீடு செய்வதன் மூலம் அடுத்தடுத்த லாபங்கள் கிடைப்பதால், சில ஆண்டுகள் தாமதிப்பது கூட உங்கள் ஒட்டுமொத்த வருமானத்தில் பெரிய சரிவை ஏற்படுத்தும்.

ஓய்வூதிய திட்டமிடுதலில் இது மிக தெளிவாக தெரிகிறது. முதலீட்டை தள்ளிப் போடுவதால் ஏற்படும் உடனடி பாதிப்பை முதலீட்டாளர்கள் பலரும் உணர்வதில்லை. 20 முதல் 25 ஆண்டுகள் என்ற நீண்ட கால இலக்கு இருக்கும் போது, பெரிய அளவிலான நிதியை உருவாக்க இன்னும் போதிய அவகாசம் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிய தாமதங்கள் கூட நீண்ட கால சொத்து உருவாக்கத்தை தடுக்கும்.
நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?
உதாரணமாக, 40 வயதில் தொடங்குவதை விட, 30 வயதில் ஓய்வூதிய திட்டத்தை தொடங்குவது, வருமானத்தில் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். முன்கூட்டியே தொடங்கி சீராக முதலீடு செய்வது, கூட்டு வட்டியின் முழு பலனையும் பெற உதவுகிறது. இது உங்கள் நீண்ட கால நிதி இலக்குகளை எளிதாக அடைய வழிவகுக்கும்.

நீண்ட கால இலக்குகளுக்கு, சந்தை சார்ந்த அதிக லாபம் ஈட்டும் திறனை கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவை முதலீட்டை பல்வகைப்படுத்துவதோடு, நீண்ட கால அடிப்படையில் பாரம்பரிய நிலையான வருமான முதலீடுகளை விட சிறப்பான லாபத்தை வழங்குகின்றன. அதோடு ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு பதிலாக, சிறிய தொகையை தொடர்ந்து முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள எஸ்ஐபி போன்ற முறையான முதலீட்டு திட்டம் மிகவும் ஏற்றது.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
ஓய்வு காலத்திற்கு 3 கோடி ரூபாய் என்ற நிதி இலக்கை அடைய இந்த உத்தி எவ்வாறு உதவுகிறது என்பதை அறிய, 30 மற்றும் 40 வயதில் முதலீட்டை தொடங்குபவர்களின் ஒரு சிறிய கணக்கீடு இதோ:

30 வயதில் ரூ.3 கோடி சாத்தியமா?
எஸ்ஐபி முதலீடு - ரூ.9000
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
வருமானம் எதிர்பார்ப்பு - 12%
மொத்த முதலீடு - ரூ.32,40,000
வருமானம் - ரூ.2,85,29,223
மொத்த கார்ப்பஸ் - ரூ.3,17,69,223

40 வயதில் ரூ. 3 கோடி சாத்தியமா?
எஸ்ஐபி முதலீடு - ரூ.9000
முதலீட்டு காலம் - 20 ஆண்டுகள்
வருமானம் எதிர்பார்ப்பு - 12%
மொத்த முதலீடு - ரூ.21,60,000
வருமானம் - ரூ.68,32,331
மொத்த கார்ப்பஸ் - ரூ.89,92,331
ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?
மேற்கண்ட இரு கணக்கீடுகளின் மூலம் காலம் எத்தகைய இடைவெளியை உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 20 ஆண்டுகள் முதலீடு செய்தாலும், உங்கள் இலக்கில் பாதியை கூட எட்ட முடியாமல் திணறலாம். ஒன்று 40 வயதில் முதலீடு செய்யும் போது முதலீட்டை சுமார் 30,000 ரூபாய் அளவில் அதிகரிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் நினைத்த இலக்கை எட்ட முடியும். இல்லையேல் உங்களால் இலக்கை எட்டவே முடியாது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+